- Advertisement 3-
Homeவிளையாட்டுவிராட் கோலிக்கு ஓய்வு.. எல்லாம் மும்பை லாபி தான் காரணம்.. சச்சின் சாதனையை காப்பாத்த பாக்கறாங்க.....

விராட் கோலிக்கு ஓய்வு.. எல்லாம் மும்பை லாபி தான் காரணம்.. சச்சின் சாதனையை காப்பாத்த பாக்கறாங்க.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

- Advertisement-

ஆசியக் கோப்பை வெற்றிக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. செப்.22ஆம் தேதி முதல் செப்.27ஆம் தேதி நடக்கவுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் முதல் இரு போட்டிகளுக்கு கேஎல் ராகுல் கேப்டனாகவும், கடைசி போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.

அதேபோல் முதல் இரு போட்டிகளுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் எதற்கு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisements -

இந்த நிலையில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஏராளாமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அண்மைக் காலமாக விராட் கோலி சிறந்த ஃபார்மில் பேட்டிங் செய்து வருகிறார். நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் 5 சதங்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று பார்க்கப்பட்டது.

அதில் முதல் கட்டமாக சச்சின் விளாசிய அதிக ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களை விளாசி அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்களுடன் விராட் கோலி விளையாடி வருகிறார்.

- Advertisement-

இன்னும் 4 சதங்கள் விளாசினால் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சமன் செய்ய முடியும். அதனை விராட் கோலி உலகக்கோப்பை தொடருக்குள் முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் விராட் கோலியை சச்சின் சாதனையை முறியடிக்கவிடாமல் மும்பை லாபி தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சச்சினின் அதிக சதங்கள் சாதனையை காப்பாற்றுவதற்காகவே விராட் கோலியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவிடாமல் ஓய்வு வழங்கியதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர் அனைவருமே மும்பை வீரர்களாக இருப்பதே காரணம் என்றும் அவர்கள் விமர்சித்துவருகின்றனர்.

சற்று முன்