- Advertisement 3-
Homeவிளையாட்டுடி10 லீக்கில் ஷாஹித் அப்ரிடியுடன் விளையாட இருக்கும் முன்னாள் சி.எஸ்.கே வீரர் - விவரம் இதோ

டி10 லீக்கில் ஷாஹித் அப்ரிடியுடன் விளையாட இருக்கும் முன்னாள் சி.எஸ்.கே வீரர் – விவரம் இதோ

- Advertisement-

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர்களை போன்று பல்வேறு நாடுகளிலும் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டி20 போட்டிகளை தாண்டியும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது தான் டி10 என்கிற 10 ஓவர் போட்டிகள். இப்படி 10 ஓவர்கள் வரை நடைபெற நடைபெறும் இந்த போட்டிகள் குறைந்த நேரத்திலேயே அதிகளவு பொழுதுபோக்கினை வழங்குவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த டி10 தொடரானது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

அதோடு கிரிக்கெட் போட்டிகளின் மீதான ஆர்வம் இல்லாத நாடுகளில் நடத்தப்படும் இந்த டி10 தொடர்கள் மூலம் அவர்களும் கிரிக்கெட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கும் இந்த போட்டியின் மீதான ஈர்ப்பினையையும், ஆர்வத்தினையும் கொண்டு வரும் வகையிலும் இந்த தொடரானது நடைபெற்று வருகிறது.

- Advertisements -

அந்த வகையில் விரைவில் அமெரிக்காவில் நடைபெறயிருக்கும் யு.எஸ்.டி10 மாஸ்டர்ஸ் லீக்கில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான முரளி விஜய் நியூயார்க் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தயில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான சாகித் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், கம்ரான் அக்மல், இலங்கை அணியின் வீரர்களான தில்ஷான் போன்றோரும் இந்த நியூயார்க் வாரியர்ஸ் அணியில் விளையாட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய முரளி விஜய் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தோனியின் தலைமையின் கீழ் அறிமுகமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்வரும் டி10 லீக் தொடரில் விளையாடுவதற்கு முன்னதாக இதுகுறித்து பேசியுள்ள முரளி விஜய் கூறுகையில் : தோனியின் தலைமையின் கீழ் நான், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா போன்ற பலவீரர்கள் விளையாடியுள்ளோம்.

- Advertisement-

அவர் எங்களுக்கு மூத்த சகோதரரை போல அறிவுரை கூறி சிறப்பாக வழி நடத்தினார். அவருடன் இருந்த உறவானது மிகவும் அருமையாக இருந்தது என முரளி விஜய் தெரிவித்து இருந்தார். இதுபோன்று வெளிநாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் பங்கேற்று விளையாட ஆர்வம் காட்டும் வேளையில் தற்போது தமிழக வீரரும், முன்னாள் சிஎஸ்கே துவக்க ஆட்டகாரருமான முரளி விஜய்யும் டி10 லீக்கில் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்