- Advertisement -
Homeவிளையாட்டுவினோதமான முறையில் அவுட்.. சிவனேன்னு கையை வெச்சுட்டு இருக்காம முஷ்பிகுர் ரஹீம் பாத்த வேலை..

வினோதமான முறையில் அவுட்.. சிவனேன்னு கையை வெச்சுட்டு இருக்காம முஷ்பிகுர் ரஹீம் பாத்த வேலை..

- Advertisement-

உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு பல நாடுகள் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களை ஆடி வருகின்றது. அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து முடிந்திருந்த சூழலில் இதனை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருந்தது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி சாதனை வெற்றியை புரிந்திருந்தது. பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு கடும் அதிர்ச்சியளித்ததுடன் அந்த அணியை தங்களின் சொந்த மண்ணிலும் பங்களாதேஷ் அணி முதல் முறையாக வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியம் என்ற சூழலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய பங்களாதேஷ் அணி, நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 172 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில், சாண்ட்னர் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தனர்.

பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே சொதப்ப ஆரம்பித்தது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 55 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி சேர்த்துள்ளது. சிறிய இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் ரன் குவிக்க தடுமாற்றம் கண்டுவரும் நியூசிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவுமா என்ற சோகமும் நியூசிலாந்து ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

- Advertisement-

இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் அவுட்டான விதம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து வீரர் ஜேமிசன் பந்தை எதிர்கொண்டார் முஷ்பிகுர் ரஹீம். அது அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பை நோக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் அவுட்டாகி விடுமோ என்ற பதற்றத்தில் அந்த பந்தை பேட்டைக் கொண்டு தடுக்காமல் தனது கைகளை கொண்டு தள்ளி விட்டார். இதனால் நியூசிலாந்து வீரர்கள் அவுட் என நடுவரிடம் முறையிட, தொடர்ந்து மூன்றாவது நடுவருக்கும் முடிவு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது ஃபீல்டிங்கை தொந்தரவு செய்ததன் பெயரில் முஷ்பிகுர் ரஹீம் அவுட்டானதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்னர் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த முறையில் அவுட்டாகி இருந்தாலும் பங்களாதேஷ் வீரர் ஒருவர் இப்படி அவுட் ஆவது இதுதான் முதல் முறை. முன்னதாக, உலக கோப்பைத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் 3 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் அவுட் என பங்களாதேஷ் அணி அப்பீல் செய்தது.

இதற்கு நடுவரும் அவுட் என அறிவிக்க, மேத்யூஸ் மற்றும் பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இடையே அந்த போட்டி முழுவதும் சிறிய வாக்குவாதமும் உருவானது. இப்படி வினோதமான முறையில், மேத்யூஸ் அவுட்டான ஒரு மாதத்தில் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் வினோதமான முறையில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்