- Advertisement -
Homeவிளையாட்டுடெஸ்ட்ல என்னோட 800 விக்கெட்டுகள்.. நிச்சயம் ஒருத்தரால கூட நெருங்க முடியாது.. காரணத்தோடு சொன்ன முரளிதரன்..

டெஸ்ட்ல என்னோட 800 விக்கெட்டுகள்.. நிச்சயம் ஒருத்தரால கூட நெருங்க முடியாது.. காரணத்தோடு சொன்ன முரளிதரன்..

- Advertisement-

கிரிக்கெட் அணியை பொருத்தவரையில் சில நெருங்க முடியாத சாதனைகள் என நாம் பட்டியல் போட்டால் உடனடியாக முதலில் ஞாபகத்திற்கு வருவது சச்சின் டெண்டுல்கர் பேட்ஸ்மேனாக படைத்த பல சாதனைகள் தான். இதில் நிறைவற்றை தற்போது விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள் நெருங்கி வந்தாலும் அனைத்து சாதனைகளையும் நொறுக்கி சச்சினை போல மாற முடியுமா என்று கேட்டால் நிச்சயம் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

அந்த அளவுக்கு அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் பலர் இருந்த காலகட்டத்தில் தனது பேட்டிங் மூலம் பெயர் எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் அரங்கின் கடவுள் என்றும் வர்ணிக்கப்பட்டு வருகிறார். பேட்டிங்கில் எப்படி சச்சின் சர்வதேச அரங்கில் ஜொலித்தாரோ அதேபோல பந்து வீச்சில் அதுவும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்த ஒரு வீரர் என்றால் உடனடியாக நம் ஞாபகத்திற்கு வருவது முத்தையா முரளிதரன் தான்.

இலங்கை வீரரான இவர் தனது வாழ்நாளில் பல கஷ்டங்களைக் கடந்து டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக ஜொலித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மொத்தம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தபடியாக ஷேன் வார்னே, ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி உள்ளார்.

தொர்ந்து அணில் கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும் பலரும் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது ஆடிவரும் பந்து வீச்சாளர்களில் அஸ்வின் மற்றும் லயன் ஆகியோர் 500 விக்கெட்டுகளைக் கடந்தாலும் அவர்கள் 800 விக்கெட்டுகளை நெருங்குவார்ளா என்று கேட்டால் நிச்சயம் அவர்களுடைய வயது உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக முடியாது என்றே தைரியமாக சொல்லிவிடலாம்.

- Advertisement-

இதனிடையே தனது 800 விக்கெட்டுகளை யாராலும் நெருங்க முடியாது என முத்தையா முரளிதரன் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “நான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பற்றி அதிக கவலை கொள்கிறேன். பல அணிகளும் ஒரு ஆண்டுக்கு 6 முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடுகின்றனர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் ஆஷ்ஸ் போன்ற தொடர்களில் ஆடுகின்றனர்.

ஆனால் மற்ற சில நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை ரசிகர்களே பார்ப்பது இல்லை. அங்கே மிக மிக குறைந்த டெஸ்ட் போட்டிகள் தான் நடந்து வருகிறது. இதனால் எனது 800 டெஸ்ட் விக்கெட்டுகளை கடப்பதும் மிகக் கடினம். ஏனென்றால் தற்போது குறைந்த ஓவர் போட்டிகள் மீதுதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அதேபோல நாங்கள் 20 ஆண்டுகள் வரை கிரிக்கெட் போட்டிகள் ஆடி வந்தோம். ஆனால் தற்போது ஆடு்ம் வீரர்களின் கிரிக்கெட் பயணம் மிக மிக குறுகிய ஆண்டாக உள்ளது. தொடர்ச்சியாக ஆடுவது தான் பலருக்கும் இங்கே பிரச்சனையாக இருக்கிற்து. அவர்கள் அனைவருமே திறமையான வீரர்கள் தான். ஆனால் அனுபவம் தான் அதிக விக்கெட்டுகளை எடுக்க உதவி செய்யும்.

தற்போது நிறைய தொடர்களை பற்றிய குழப்பங்கள் அவர்கள் தலையில் இருப்பதால் நிச்சயம் விக்கெட்டுகள் எடுப்பதே தற்போது கடினமான ஒன்றுதான்” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே ரசிகர்கள் கூட டெஸ்ட் போட்டிகளை மறந்து டி20 போட்டிகளில் அதிக சுவாரஸ்யத்தை காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்