- Advertisement -
கிரிக்கெட்

இவருக்கா டீம்ல இடம் கொடுக்கல.. பும்ராவை முந்தி சரித்திரம் படைத்த நம்ம நடராஜன்..

ஐபிஎல் தொடரின் கடந்த சில போட்டிகள் ஒரு அணிக்கு சாதகமாகவே சென்றிருந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த போட்டி கடைசி பந்து வரைக்கும் திரில்லாக சென்றிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் மோதி இருந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளுடன் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்ட நிலையில், மற்ற அனைத்து அணிகளுமே இதற்காக போராடியும் வருகிறது.

இதனிடையே, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியிருந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, ரன் சேர்க்கவே தடுமாற்றம் கண்டதால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி மிக எளிதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் மிக சிறப்பான ஆட்டத்தை ஹைதராபாத் அணி யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆடி இருந்தது. நிதிஷ் ரெட்டி மற்றும் ஹென்ரிச் க்ளாஸன் இணைந்து அதிரடியாக ஆடி ரன் சேர்க்க, அவர்கள் 201 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருந்தனர்.

தொடர்ந்து 202 ரன்கள் வேண்டும் என்ற சூழலில் ஆடியிருந்த ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே ஒரு ரன் சேர்ப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஆனாலும் பின்னர் கைகோர்த்து அதிரடி ஆட்டம் தொடங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இணைந்து ராஜஸ்தானை மீட்டெடுக்க, அணியின் வெற்றியும் அருகே வந்தது போல தோன்றியது.

- Advertisement -

ஆனால் கடைசி மூன்று ஓவர்களை மிகச் சிறப்பாக வீசி போட்டியையும் மீண்டும் மாற்றி இருந்தனர் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள். 20 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 25 ரன்களை தான் ஹைதராபாத் அணி கொடுத்திருந்தது. நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என அனைவரும் நன்றாக பந்து வீசியதால் கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இதன் காரணமாக புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளவர்கள், தற்போது நான்காவது இடத்தில் உள்ளனர். இதனிடையே தமிழக வீர்ர் நடராஜன் எட்டிப்பிடித்த உயரத்தை பற்றி தற்போது காணலாம். இந்த சீசனில் 8 போட்டிகள் ஆடியுள்ள நடராஜன் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இதன் மூலம், இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருந்த நடராஜன், பும்ராவை முந்தி பர்பிள் கேப்பையும் வென்றுள்ளார். பும்ரா 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்துள்ள சூழலில், 8 போட்டிகளிலேயே அதனை கடந்து அசத்தி உள்ளார் நடராஜன். சமீபத்தில் டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், நல்ல ஃபார்மில் இருக்கும் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை.

அப்படி இருக்கையில், தற்போது பர்பிள் கேப்பையும் நடராஜன் வென்றுள்ளதால் பிசிசிஐ அவரது விஷயத்தில் பெரிய தவறு செய்து விட்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Recent Posts