- Advertisement -
Homeவிளையாட்டுஸ்டார்க்குக்கு மட்டுமில்ல.. எனக்கும் அது நடந்துச்சு.. லயனிடமும் வேலையை காட்டிய ஜெய்ஸ்வால்.. நடந்தது என்ன..

ஸ்டார்க்குக்கு மட்டுமில்ல.. எனக்கும் அது நடந்துச்சு.. லயனிடமும் வேலையை காட்டிய ஜெய்ஸ்வால்.. நடந்தது என்ன..

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு பெரிய அணிகள் மோதி விட்டால் அந்த டெஸ்ட் போட்டிக்கு நடுவே எப்போதும் வார்த்தை போர் நீடித்துக் கொண்டே இருக்கும். இதற்கு அந்த இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடர்களில் பல தருணங்களை சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு சம்பவங்கள் இருந்தாலும் சமீபகாலமாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அதிகமாக வார்த்தைகள் மூலம் மோதுவது கிடையாது.

சச்சின் காலம் தொடங்கி விராட் கோலி முன்னணி வீரராக ஆடத் தொடங்கிய சமயம் வரை வார்னர், ஸ்மித் என ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பல வீரர்கள் இந்திய அணி வீரர்களுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டிருந்தனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தங்களது ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லி இருந்தாலும் சமீப காலமாக அவை சற்று குறைந்து விட்டதாகவே தெரிகிறது.

சுவாரசியம் இல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டி சென்று கொண்டிருக்கும் போது இப்படி மாறி மாறி வார்த்தைகளை விடும் பட்சத்தில் அவை திடீரென விறுவிறுப்பை ஏற்படுத்தி பரபரக்க வைக்கும். இதன் காரணமாகவே பல ரசிகர்களும் டெஸ்ட் போட்டிகளை அதிகம் எதிர்பார்த்து வரும் சூழலில் சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்டில் நடந்த ஒரு சம்பவமும் அதிகம் விவாதமாக மாறி இருந்தது.

22 வயதேயாகும் ஜெய்ஸ்வால், தனது பந்து வீச்சின் வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நடுங்க வைக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கை பார்த்து, நீங்கள் மெதுவாக பந்து வீசுகிறீர்கள் என வார்த்தையை விட்டு விட்டார். ஸ்டார்க்கும் சிரித்து விட்டு கடந்த செல்ல பின்னர் அளித்த பேட்டியில் ஜெய்ஸ்வால் சொன்னது கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement-

ஒரு காலத்தில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன்களாக இருந்தவர்களே ஸ்டார்க்கை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை தெரிவித்ததில்லை என்ற நிலையில் ஜெய்ஸ்வாலின் துணிச்சல் பலரையும் வியந்து தான் பார்க்க வைத்துள்ளது. அப்படி ஒரு சூழலில் ஸ்டார்க்கிடம் மட்டுமில்லாமல் தன்னிடமும் ஸ்லெட்ஜிங்கில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கூறியுள்ளார்.

“இளம் வீரரான ஜெயஸ்வால் நான் பந்துவீசி கொண்டிருந்த போது என்னிடம், ‘நீங்கள் லெஜெண்ட் தான். ஆனால் வயதானவர்’ என்று கூறியிருந்தார். ஜெய்ஸ்வால் 130 ரன்களை நெருங்கிய போது இந்த வார்த்தையை என்னிடம் கூறியிருந்தார். அவை அனைத்துமே மிக வேடிக்கையான ஒரு தருணமாக இருந்தது. அதையும் நான் அவரிடம் கூறினேன்.

இதன் பின்னர் ஜெய்ஸ்வாலிடம், ‘உங்களது வார்த்தைக்கு பாராட்டுக்கள். ஆனால் நான் அந்த அளவுக்கு வயதானவனாக உணரவில்லை’ என்று கூறினேன்” என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்