- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா இல்ல.. ஆஸ்திரேலியா கூட இந்த ஆசியா டீம் தான் ஃபைனல் ஆடும்.. பத்த வெச்ச...

இந்தியா இல்ல.. ஆஸ்திரேலியா கூட இந்த ஆசியா டீம் தான் ஃபைனல் ஆடும்.. பத்த வெச்ச லயன்..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில், மொத்தம் உள்ள 20 அணிகள் கடுமையாக போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் நான்கு குழுக்களாக இருபது அணிகள் பிரிக்கப்பட்டு நடைபெற உள்ள நிலையில், இதில் பல பிரிவுகளில் சிறிய அணிகள் அதிகம் உள்ளதால் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே வேளையில் சிறிய அணிகள் என்ற பெயருடன் இருக்கும் யாரையும் நிச்சயம் குறைவாக எடை போட்டு விட முடியாது. கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் ஆப்கானிஸ்தான் அணி தவற விட்டிருந்தது. இதேபோல நெதர்லாந்து அணியும் கூட பெரிய அணிகளை வீழ்த்தி உலககோப்பை தொடரில் பட்டையை கிளப்பி இருந்தது என்றே சொல்லலாம்.

அதைவிட மற்றொரு சிறந்த உதாரணமாக சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது USA அணி. இப்படி சிறிய அணிகள் எதிர்பாராத நேரத்தில் வெற்றிகளை குவித்து வருவதால் நிச்சயம் அனைவருக்குமே கடும் நெருக்கடியும், போட்டியும் இருக்கும் என்று தான் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் வழக்கம் போல ஒரு உலகக்கோப்பை தொடர் வருவதற்கு முன் யார் வெற்றி பெறுவார்கள், யார் அதிக ரன்களை எடுப்பார்கள், யார் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பது பற்றிய கணிப்பும் மிக பலமாக இருந்து வரும்.

- Advertisement 2-

அந்த வகையில் அரை இறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் பற்றி பலரும் தெரிவித்திருந்த கணிப்புகளில் இந்திய அணி தவறாமல் இடம்பிடித்திருந்தது. ஒரு சிலர் ஆஸ்திரேலியா அணி இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறாது என தெரிவித்திருந்தாலும் இந்தியாவின் பெயரை யாருமே விட்டுவிடவில்லை. அப்படி இருக்கையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இந்த இரு அணிகள் தான் இறுதி போட்டிக்கு முன்னேறும் என தனது கணிப்பையும் தற்போது தெரிவித்துள்ளார்.

“டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயம் தகுதி பெறுவார்கள். ஏனென்றால் நான் அவர்களிடம் ஒரு தலைபட்சமாக இருக்கிறேன். மேலும் இரண்டாவது அணியாக நான் பாகிஸ்தானை குறிப்பிடுவேன். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற சூழலில் அவர்களிடம் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாபர் அசாம் போன்ற எலக்ட்ரிக் பேட்ஸ்மேன்களும் உள்ளனர்” என நாதன் லயன் கூறியுள்ளார்.

தற்போது இருக்கும் ஃபார்மிற்கு ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி கொடுக்கும் அணியாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்டோர் இருக்கும் போது பாகிஸ்தானை லயன் தேர்வு செய்தது பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி உள்ளது. இதனால் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்திய அணி நிச்சயம் இறுதி போட்டிக்கு முன்னேறி நாதன் லைன் கருத்துக்கு நல்ல பதிலடியை கொடுக்கும் என்றும் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சற்று முன்