இந்தியாவில் எத்தனையோ வீரர்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினாலும், நமது மண்ணின் மைந்தர்கள் இந்திய அணியில் விளையாடுவதை ரசிப்பதே ஒரு தனி உணர்வு தான். அப்படி கடந்த சில வருடங்களால தமிழக இளைஞ்சர்களின் எழுச்சி நாயகனாக விளங்குகிறார் நடராஜன். கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் மூலம் அறியப்பட்டார் நடராஜன்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரின் திறமையை ஐபிஎல்-ல் பார்த்து இவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நடராஜன். இதன் காரணமாக இந்திய அணியில் ஒரு முக்கிய வீரரான இவர் மாறினார்.
இந்த நிலையில் தான் துரதிஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டார். அதே சமயம் கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் கூட அவர் நிறைய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மீண்டும் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.
அதே வேலையில் நடராஜன், தான் வாழும் கிராமத்தை சுற்றி உள்ள இளைஞர்களும் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் நடராஜன் கிரிக்கெட் அகாடமி என்ற ஒன்றை ஆரமித்து அதில் பல்வேறு இளைஞர்களுகு சிறப்பான பயிற்சிகளை கொடுத்து வருகிறார். இவர் அகாடமி மூலமாக இளைஞர்கள் டிஎன்பிஎல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கென்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடராஜனின் நீண்ட நாள் கனவாக இருந்தது என்னவென்றால் தனது மக்களுக்காக சர்வதேச தரத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வேண்டும் என்பதே. அதற்கான முயற்சியில் அவர் இறங்கி, அந்த பணிகளும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் அந்த மைதானத்தின் பணிகள் பெருமளவில் தற்போது முடிந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: 3 சிஎஸ்கே வீரர்கள்: ஐபிஎல்-ல் சிஎஸ்கே-விற்காக சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த 3 வீரர்கள்
அந்த மைதானத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை தினேஷ் கார்த்திக் வரும் ஜூன் 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே அணியின் சிஇஓ விஸ்வநாதன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.