Homeகிரிக்கெட்இந்தியாவிலேயே இல்லை. லண்டனில் கால்பதித்ததும் இந்திய அணியில் இடம். மகிழ்ச்சியின் உச்சியில் வீரர்

இந்தியாவிலேயே இல்லை. லண்டனில் கால்பதித்ததும் இந்திய அணியில் இடம். மகிழ்ச்சியின் உச்சியில் வீரர்

-Advertisement-

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்துக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு எதிர்பாராத விதமாக இடம் கிடைத்துள்ளது. நவ்தீப் சைனிக்கு இந்த அறிவிப்பு எதிர்பாராத மகிழ்ச்சியாக அமைந்திருக்கும்.

ஏனன்றால் அவர் வெள்ளிக்கிழமை கவுண்டி போட்டி விளையாடுவதற்காக  இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார். அந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளில் இரண்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் கவுண்டி (கிரிக்கெட்) விளையாட இங்கு வந்தேன்.  விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்ற செய்தி கிடைத்தது .

-Advertisement-

உண்மையாக, இந்த அறிவிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. ஆம், ஐபிஎல்லின் போது, ​​நான் டியூக்ஸ் பந்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தேன், ஏனெனில் நான் ஒரு நெட் பவுலராக தேர்வு செய்யப்படலாம் அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இருப்பேன் என்று நினைத்தேன்.

வெஸ்ட் இண்டீசுக்கு செல்வதற்கு முன் நான் ஒரு கவுண்டி போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இது நல்ல தயாரிப்பாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் இயல்பாகவே  காயங்களுக்கு ஆளாகிறோம். எனக்கு நல்ல விஷயம் என்னவென்றால், தொடர்ச்சியான காயங்கள் எதுவும் இல்லை.

-Advertisement-

காயமடைவது அடைவது என்பது உண்மையில் வெறுப்பான ஒரு மனநிலையை உருவாக்கும். என்னை பொறுத்தவரை, நான் வெவ்வேறு இடங்களில் காயமடைந்த போது எனக்கு அது சற்று எரிச்சலூட்டியது என்றே கூறவேண்டும். ஆனால் இதெல்லாம் நம் கையில் இல்லை. நான் அதை ஏற்றுக்கொண்டேன். காயத்தில் இருந்து மீள்வது மட்டுமே எனது ஒரே கவனமாக இருந்தது” என்று சைனி கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ஆஸி அணிக்கு எதிரான  புகழ்பெற்ற பிரிஸ்பேன் வெற்றியின் ஹீரோக்களில் ஒருவரான சைனி, அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இப்போது அணியில் இடம்பிடித்துள்ளார். அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு ஜெய்தேவ் உனட்கட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருடன் சைனி பெயரும் இடம்பெற்றுள்ளது.

-Advertisement-

சற்று முன்