- Advertisement -
Homeவிளையாட்டுகத்துங்க, கோலி கோலினு இன்னும் நல்லா கத்துங்க. நீங்கள் கத்த கத்த தான் எனக்கு இன்னும்...

கத்துங்க, கோலி கோலினு இன்னும் நல்லா கத்துங்க. நீங்கள் கத்த கத்த தான் எனக்கு இன்னும் நல்லா அப்படி இருக்கு. மைதான நிகழ்வு குறித்து நவீன் உல் ஹக் பேட்டி

- Advertisement-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயட்ன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு எதிராக லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இருப்பினும் இந்த போட்டியில் மும்பை அணியே வெற்றி பெற்றது.

இந்த சீசனில் முதன் முறையாக லக்னோ அணியால் வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரின் செயல்பாடுகளால் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒரு நபராகவே இருந்து வந்தார். அதிலும் குறிப்பாக விராட் கோலி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்கள் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்திருந்தனர்.

இந்நிலையில் எலிமினேட்டர் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் நாடு திரும்புவதற்கு முன்னர் நவீன் உள் ஹக் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : மைதானத்தின் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை சொல்லி சொல்லி என்னை பார்த்து கோஷம் இடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்.

- Advertisement-

ஏனெனில் மைதானத்தில் உள்ள வீரர்கள் விராட் கோலியின் பெயரையோ அல்லது வேறு எந்த வீரரின் பெயரையோ சொல்லி உச்சரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அவர்கள் சொல்லும்போது எனது அணிக்காக நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்ற உற்சாகத்தையும், எண்ணத்தையும் எனக்கு தரும்.

இதையும் படிக்கலாமே: தோனி ஓய்வா? இதெல்லாம் இருக்கும்போது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. பேட்டிங் வரிசை செமையா இருக்கு – பிராவோ கருத்து

நான் வெளியில் இருந்து வரும் சத்தத்திற்கு கவனம் கொடுப்பதில்லை. எனது கவனம் எல்லாம் நான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுதர வேண்டும் என்பது மட்டுமே. இப்படி கோஷம் இடுவதால் அந்த வார்த்தைகள் என்னை பாதிக்காது மாறாக அந்த வார்த்தைகளை என் முன்னேற்றத்திற்காக எடுத்துக் கொள்வேன் என நவீன் உல் ஹக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்