- Advertisement 3-
Homeவிளையாட்டுRCB-யின் தோல்வியால் கோலியையும் RCB-யையும் பங்கமாய் கலாய்க்கும் வகையில் பதிவு போட்ட நவீன் உல் ஹக்....

RCB-யின் தோல்வியால் கோலியையும் RCB-யையும் பங்கமாய் கலாய்க்கும் வகையில் பதிவு போட்ட நவீன் உல் ஹக். செம கடுப்பான கோலி ரசிகர்கள்

- Advertisement 1-

சில வாரங்களுக்கு முன்னர் நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் வெற்றியின் போது ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இதனால் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்குக்கும், கோலிக்கும் இடையே மைதானத்தில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்தது.

அந்த மோதல், போட்டி முடிந்த பின்னரும் தொடர்ந்தது. இந்த மோதலில் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீரும் கலந்துகொள்ளவே விரும்பத்தகாத சம்பவமாக இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் அப்போதே வைரல் ஆனது. பல மூத்த வீரர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டவர்களைக் கண்டித்து பேசினர்.

அதைத் தொடர்ந்து லக்னோ அணி தோற்கும் போட்டிகளை கோலி, மறைமுகமாக கொண்டாடுவதும், பெங்களூர் அணி தோற்கும் போட்டிகளின் போது நவீன் உல் ஹக் கோலியை மறைமுகமாக சீண்டுவதும் என சம்பவங்கள் நடந்து வந்தன. இதற்கிடையில் கோலி ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கம்பீரையும், நவீன் உல் ஹக்கையும் கண்டமேனிக்கு கலாய்க்க ஆரம்பித்தனர்.

கம்பீரின் அருகில் ‘கோலி கோலி’ எனக் கத்தி அவரை சீண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் நடந்த சம்பவத்தை மறந்து அதைக் கடந்து செல்ல யாருமே முன்வரவில்லை என்பது தெளிவானது. இந்நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது ஆர்சிபி அணி.

- Advertisement 2-

இந்த போட்டியில் கோலி, அபாரமான சதமடித்தும் அணி தோல்வியடைந்தது ரசிகர்களைப் பெருமளவில் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நவீன் உல் ஹக் கோலியையும், ஆர்சிபி அணியையும் கலாய்க்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: நான் செம போர்ம்ல இருக்கன். சென்னைக்கு எதிராக எங்களுடைய பௌலிங் அட்டாக் வேற மாதிரி இருக்கும். சுப்மன் கில் சூளுரை

தொலைக்காட்சி விவாதம் போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் அடக்க முடியாமல் சிரிப்பது போன்ற அந்த வீடியோ, ஆர்சிபியை தாக்கும் விதமாகவே உள்ளதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கோலி ரசிகர்கள் நவீன் உல் ஹக்கின் செயலை பெரிதும் கண்டித்து வருகின்றனர். அதே சமயம் நவீன் உல் ஹக் வெளியிட்ட அந்த ஸ்டோரி இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

சற்று முன்