ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் சமூக வலைதளப்பதிவுகளின் மூலம் ரகசிய குறியீடுகளுடன் தனது கருத்தினை வெளியிட்டு சர்ச்சைகளில் சீக்குவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் களத்தில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு இவரது பதிவுகள் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியதாக தெரிகிறது.
ஏனெனில் கடந்த மே மாதம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த அந்த போட்டி சர்ச்சைக்குரிய முறையில் முடிவடைந்தது. அந்த போட்டியின் போது நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் வாய் தவறாரில் ஈடுபட அந்த போட்டி முடிந்தும் அவர்களது பிரச்சனை பெரிய விடயமாக மாறியது. ஆட்டத்தின் போது கோலி தனது ஷூவை நவீன் உல் ஹக்கிடம் காட்டி அவமரியாதை செய்ததாக தெரிகிறது.
பின்னர் ஆட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு வீரரும் கைகுலுக்க சென்றபோது நவீன் உல் ஹக் விராட் கோலியை வாழ்த்தி கைகுலுக்க தவறினார். அப்போது லக்னோ அணியின் வழிகாட்டியான கம்பீரும் அந்த சண்டையினுள் முற்படவே களத்தில் இந்த விவகாரம் சூடு பிடித்தது. பின்னர் களத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று பேருக்குமே அபராதம் விதிக்கப்பட்டது.
அதோடு இன்ஸ்டாகிராமிலும் அவர்களது இந்த விவகாரம் பெரிய அளவில் தீ பிடித்தது. அதிலிருந்து விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரது சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு கழுதையுடன் வாதிடும் புலியின் கட்டுரையை ரகசியமாக வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டு நவீன் உல் ஹக் விராட் கோலியை தாக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் குறிப்பிட்டதாவது : உண்மையை அல்லது எதார்த்தத்தை பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியுடன் இருக்கும் ஒருவருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். நாம் எவ்வளவு ஆதாரங்களை முன் வைத்தாலும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாதவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே எல்லாவர்களிடமும் சரியாக இருக்க வேண்டும் என்று நவீன் உல் ஹக் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு விராட் கோலி தான் இந்த சண்டையை தொடங்கினார் என்றாலும் நவீன் உல் ஹக் அடிக்கடி இதே போன்று மறைமுகமாக கோலியின் மீதுள்ள காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்றும் சிலர் கூறுகின்றனர். மேலும் அந்தப் போட்டி முடிந்ததற்கு பின்னர் பேசிய நவீன் உல் ஹக் கூறுகையில் : நான் சண்டையிட துவங்கவில்லை. போட்டிக்கு பிறகு நாங்கள் கைகுலுக்கி சென்ற போது விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.