Homeகிரிக்கெட்1 போட்டியில் 5 உலக சாதனை.. 9 பாலில் 50 ரன்... 20 ஓவரில் 314...

1 போட்டியில் 5 உலக சாதனை.. 9 பாலில் 50 ரன்… 20 ஓவரில் 314 ரன்.. ரோகித், யுவராஜ் ரெகார்ட் எல்லாம் காலி

-Advertisement-

சீனாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் முதல்முறையாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் அணியானது தங்கப் பதக்கத்தை வென்றிருந்த வேளையில் ஆடவர் அணிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 27-ஆம் தேதி இன்று முதல் துவங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஏசியன் கேம்ஸ் ஆடவர் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நேபாள் மற்றும் மங்கோலியா அணிகள் விளையாடின.

அதன்படி இன்று செப்டம்பர் 27-ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் மங்கோலியா முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தது. இதன் காரணமாக அந்த அணியின் 11 வீரர்களும் இன்று தான் அறிமுகமாகியிருந்தனர். அதே வேளையில் ஏற்கனவே நேபாள் ஓரளவுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளதால் அந்த அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மங்கோலியா அணியை நசுக்கிய நேபாள் அணி இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

-Advertisement-

சீனாவில் போட்டிகள் நடைபெற்று வருவதால் அங்குள்ள மைதானம் சிறிது என்பதாலும் இந்த போட்டியில் நேபாள் அணி ஏகப்பட்ட உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மங்கோலியா அணி முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நேபாள் அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

அதிலும் குறிப்பாக 20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் நேபாள் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 314 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணியாக சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து 315 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மங்கோலியாவை வெறும் 41 ரன்களில் சுருண்டதால் 273 ரன்கள் வித்தியாசத்தில் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனையையும் நேபாள் அணி படைத்துள்ளது.

-Advertisement-

மேலும் இந்த போட்டியில் நேபாள் அணி சார்பாக விளையாடிய குஷால் மல்லா என்கிற வீரர் 50 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 12 சிக்சர் என 137 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறையடித்துள்ளார். அந்த சாதனையை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரே இருந்து வந்தனர். இவர்கள் இருவருமே 35 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு இருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

ஆனால் இந்த போட்டியில் 34 பந்துகளிலேயே 100 ரன்களை அடித்த குசால் மல்லா டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதேபோன்று அவரைத் தொடர்ந்து ஐந்தாவது வீரராக களமிறங்கிய திபேந்திர சிங் 10 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்தார். மேலும் இந்த போட்டியில் 9 பந்துகளில் அவர் 50 ரன்கள் அடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு யுவராஜ் சிங் கடந்த 2007-ஆம் ஆண்டு 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அந்த சாதனையை தற்போது திபேந்திர சிங் 9 பந்துகளில் 50 ரன்கள் அடித்து யுவராஜின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் நான்காவது வீரராக களம் இறங்கிய கேப்டன் ரோஹித் பவுடலும் தனது பங்கிற்கு 27 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 61 ரன்கள் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்