- Advertisement -
Homeவிளையாட்டுபாபர் அசாம் மற்றும் விராட் கோலிக்கு இடையே சொத்து மதிப்பில் உள்ள பெரும் வித்யாசங்கள். ஏணி...

பாபர் அசாம் மற்றும் விராட் கோலிக்கு இடையே சொத்து மதிப்பில் உள்ள பெரும் வித்யாசங்கள். ஏணி வச்சா கூட எட்டாது போலயே

- Advertisement-

நவீன கிரிக்கெட்டில் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையின் மூலம் விளையாடி வருபவர் விராட் கோலி. தனது சிறப்பான பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அவர் மிகச் சிறப்பான பங்களிப்பினை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார். இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக சற்று சறுக்கலை சந்தித்த விராட் கோலி தற்போது மீண்டும் பார்மிற்கு திரும்பி ரன்களை விளாசி வருகிறார். அதோடு மீண்டும் அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக மாறி உள்ளதால் மற்ற அணிகளும் தற்போது விராட் கோலியை எச்சரிக்கையாகவே அணுகி வருகின்றனர்.

அதேபோன்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் எழுச்சியும் அற்புதமானது. சமீப காலமாகவே அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அவரும் இருக்கிறார். மிகச் சிறப்பான பேட்டிங் டெக்னிக் மற்றும் நல்ல பிளேயர் என்கிற அடையாளத்துடன் பாகிஸ்தானின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அதோடு பாகிஸ்தான் அணிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு வீரராக அவர் மாறியுள்ளார்.

பல பொறுப்புகளுடன் நல்ல பெயர் எடுத்திருக்கும் இந்தியாவின் பேட்டிங் மாஸ்ட்ரோ மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆகிய இருவருக்கும் இடையேயான சொத்து தகவலை கண்டால் நிச்சயம் மிக சுவாரசியமாக இருக்கும். அதன்படி அவர்களது சொத்து மதிப்பு வித்தியாசத்தை இங்கு காணலாம்.

விராட் கோலி: விராட் கோலியுடன் ஒப்பந்தத்திற்காக பல விளம்பர நிறுவனங்கள் அவரை பின் தொடர்கின்றன என்று நாம் சொல்லி தெரிய தேவையில்லை. அந்த அளவிற்கு ஏகப்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவரை அணுகுகின்றன. ஆனாலும் குறிப்பிட்ட விளம்பரங்களிலேயே அவர் உலக அளவில் நடித்துக் கொடுக்கிறார். அதோடு கிரிக்கெட் மற்றும் இதர முதலீடு சமூக வலைதளப்பதிவு என அவருடைய சொத்து மதிப்பு : 1050 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement-

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யால் ஏ ப்ளஸ் பிரிவில் ஆண்டு தோறும் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 15 கோடி பெறுகிறார். அதோடு பூமா, ஆடி, எம்.ஆர்.எப் போன்ற நிறுவனங்களில் அவருடைய பங்குகளின் மூலமும் கோடி கணக்கில் அவர் ஆண்டுதோறும் பணத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பாபர் அசாம்: தற்போதைய அறிக்கையின் படி பாபர் அசாமின் நிகர மதிப்பு இந்திய மதிப்பில் தோராயமாக 90 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இது கோலி சம்பாதிப்பதை விட மிகக் குறைவு. ஏனெனில் பாபர் அசாமின் ஒப்புதல் விளம்பர நிறுவனங்கள் மற்றும் அவருடைய கிரிக்கெட் ஆண்டு வருமானம் என அனைத்துமே இந்தியாவை காட்டிலும் குறைவு என்பதனால் விராட் கோலி ஓராண்டு சம்பாதிக்கும் பணமே அவரது முழு சொத்து மதிப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்