Homeகிரிக்கெட்நியூசிலாந்து அணியினர் புத்திசாலியானவர்கள்.. கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கனும்.. ரோகித் சர்மா பேட்டி

நியூசிலாந்து அணியினர் புத்திசாலியானவர்கள்.. கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கனும்.. ரோகித் சர்மா பேட்டி

-Advertisement-

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. மும்பையில் நாளை நடக்கவுள்ள இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா அணி ஒரேயொரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதேபோல் இந்திய அணியும் அனைத்து லீக் போட்டிகளில் வென்றுள்ளதால், நியூசிலாந்து அணியை வீழ்த்தி நிச்சயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று பார்க்கப்படுகிறது.

-Advertisement-

இதுதொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் புத்திசாலியான அணி என்றால் நியூசிலாந்து அணி தான். கிரிக்கெட்டுக்கான ஒழுக்கத்துடன், ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். எதிரணிகளை சிறப்பாக புரிந்து வைத்துள்ளார்கள். நியூசிலாந்து அணி வீரர்களுடன் ஏராளமான போட்டிகளில் விளையாடி இருக்கிறோம்.

எதிரணிகளின் திட்டங்களை அறிந்து விளையாடும் திறன் கொண்டவர்கள். அதேபோல் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் 2015ஆம் ஆண்டுக்கு பின் அனைத்து ஐசிசி தொடர்களில் குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

-Advertisement-

அதேபோல் இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களின் ரோல்களை சரியாக கூறியுள்ளோம். அதற்கேற்றபடி திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறோம். இதற்காக ராகுல் டிராவிடை பாராட்ட வேண்டும். இதனை எதிர்காலத்திலும் பின்பற்றுவோம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய அணியின் கடைசி வலை பயிற்சி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டர் வீரர்களும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்