- Advertisement 3-
Homeவிளையாட்டுENG vs NZ: 4 வருடங்களுக்கு பிறகு மோதல்... இரண்டு வீரர்கள் சதம்.. இங்கிலாந்தை ஓடவிட்ட...

ENG vs NZ: 4 வருடங்களுக்கு பிறகு மோதல்… இரண்டு வீரர்கள் சதம்.. இங்கிலாந்தை ஓடவிட்ட நியூசிலாந்து..

- Advertisement 1-

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 25 நாட்களே இருக்கும் சூழலில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து பயணித்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி ப்ரூக் – டேவிட் மலான் கூட்டணி களமிறங்கியது. இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில்,மலான் 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 25 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஜோ ரூட் வெறும் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

பின்னர் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் – கேப்டன் பட்லர் இணை களமிறங்கினர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பட்லர் – லிவிங்ஸ்டன் இணை அதிரடியாக ஆடியது. லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பட்லர் 68 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

கடைசி நேரத்தில் டேவிட் வில்லி அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்தது. இதன்பின் நியூசிலாந்து அணி 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கான்வே – யங் இணை முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்க்க, யங் 29 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த நிக்கோல்ஸ் நிதனாம ஆட, கான்வே அரைசதம் கடந்தார்.

- Advertisement 2-

நிதானமாக ஆடிய நிக்கோல்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டேரில் மிட்செல் – கான்வே கூட்டணி இணைந்தது. 117 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், நியூசிலாந்து அணி அதன்பின் ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. கான்வே மற்றும் மிட்செல் இருவரும் சதம் விளாச, கடைசியில் சிக்சர் அடித்து நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

இதன் மூலம் 45.4 ஓவர்களில் நியூசிலாந்து இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் ஒருநாள் போட்டியில் ஒருமுறை கூட மோதிக் கொள்ளவே இல்லை. இதனால் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்