- Advertisement -
Homeவிளையாட்டுNZ vs NED : 18 ரன் கூட தாண்டாத 7 பேர்... உலகக் கோப்பையில்...

NZ vs NED : 18 ரன் கூட தாண்டாத 7 பேர்… உலகக் கோப்பையில் இப்படி ஒரு நிலையா.. படுதோல்வியான நெதர்லாந்து.. நடந்தது என்ன?

- Advertisement-

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. முதல் போட்டியில் களமிறங்காத கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியிலும் களமிறங்கவில்லை. இதையடுத்து டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வே – யங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. பின்னர் கான்வே32 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பின்னர் சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் யங் 80 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேபோல் முதல் போட்டியில் சதம் விளாசிய ரச்சின் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 32.2 ஓவர்களில் 185 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதன்பின் வந்த வீரர்களில் கேப்டன் லேதம் 53 ரன்களும், கடைசி நேரத்தில் மிட்சென் சாண்ட்ரர் 17 பந்துகளில் 36 ரன்களும் விளாசினார்.. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் வான் டர் மெர்வ், ஆர்யன் தத் மற்றும் வான் மேக்கிரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் 323 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி யின் தொடக்க வீர்ர விக்ரம் சிங் 12 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நம்பிக்கை நட்சத்திரமான பாஸ் டி லீட் 18 ரன்கள் பெவிலியன் திரும்ப, காலின் அக்கர்மேன் மட்டும் நியூசிலாந்து அணி பந்துவீச்சை எதிர்த்து போராடி அரைசதம் விளாசினார்.

- Advertisement-

ஆனால் எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அவருக்கு எந்த உதவியும் செய்யாததால் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அக்கர்மேன் 73 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் 30 ரன்களிலும், சைய்பிராண்ட் 29 ரன்களிலும், வான் டர் மெர்வ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்டனர் 5 விக்கெட்டுகளையும், ஹென்ரி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இது உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி பெறும் இரண்டாவது வெற்றியாகும். நெதர்லாந்து அணியின் 7 வீரர்கள் 18 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்