தியோதர் கோப்பைக்கான கிரிக்கெட் அணியில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. நடப்பாண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கிய தொடராக கருதப்படும் தியோதர் கோப்பை தொடர் வரும் 24ஆம் தேதி பாண்டிச்சேரியில் தொடங்குகிறது. 50 ஓவர் போட்டியாக நடைபெறும் இந்தத் தொடரில் சவுத் சோன் அணிக்கு மாயங் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டென்டல்கருக்கு ஆல்ரவுண்டராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை விட அனுபவ சாலியாகவும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரராக திகழ்ந்த விஜய் சங்கர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் ஒரு அளவுக்கு நன்றாகவே செயல்பட்டார்.
எனினும் அவருடைய வேகம் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சவுத்சோன் அணியில் வித்வாத் காவேரிஅப்பா ,வைஷாக் விஜயகுமார் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் வேக பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்,ஜெகதீஷ்சன், அருண் கார்த்திக், சாய் கிஷோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு ஆல்ரவுண்டர் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இந்திய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் விரைவில் இடம் பெற்றாலும் ரசிகர்கள் ஷாக்காக தேவை இல்லை.
சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் அர்ஜுன் டென்டல்கருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சச்சின் ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் அர்ஜுன் தனது முதல் போட்டியில் விளையாட இரண்டு சீசன்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கடின உழைப்புக்குப் பிறகுதான் அர்ஜூன் அணியில் இடம் பிடித்திருப்பதாகவும் விளக்கம் கொடுத்துள்ளனர்.