Homeகிரிக்கெட்எப்பாடி எப்பா.. வாழ்ந்தா தோனி மாதிரி வாழனும்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

எப்பாடி எப்பா.. வாழ்ந்தா தோனி மாதிரி வாழனும்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

-Advertisement-

வெளிநாட்டு கிரிக்கெட்டர்களை விடவும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு அதிகமாகும். அதற்கு இந்திய ரசிகர்களின் எண்ணிக்கையும், இந்திய சந்தையுமே முக்கிய காரணமாகும். பெருவாரியான விளம்பர நிறுவனங்கள் சினிமா ஸ்டார்களை பயன்படுத்துவதை விடவும், கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தினால் மக்களிடையே எளிதாக சென்றடைய முடியும் என்று எண்ணுகின்றன.

இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் வருமானம் கோடிகளில் இருக்கிறது. அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடியாக கணிக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதன் மூலம் அவர் ரூ.12 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல், செவன், கார்ஸ், கருடா உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடுகளை செய்துள்ளார்.

-Advertisement-

அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல் தோனி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்., மஹி ஹோட்டல் ரெசிடன்சி மற்றும் எம்எஸ் தோனி குளோபல் பள்ளி பெங்களூருவில் உள்ளது. அதேபோல் டெஹ்ராடூனில் ரூ.17.8 கோடிக்கு வீடும், ராஞ்சியில் தோட்டத்துடன் கூடிய வீடும் வாங்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ஓரியோ, ஜியோ சினிமா, அன்அகாடமி, வியாகாம் 18, ஓப்போ, கோ டாடி, ஸ்னிக்கர்ஸ், லாலா, தமிழ் மேட்ரிமோனி, பெப்சிகோ, ரீபாக், ஸ்பார்டன் என்று 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூரதாக தோனி செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் சென்னையன் அணி, ஜிம் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் முதலீடுகளை செய்துள்ளார்.

-Advertisement-

அதேபோல் தோனியிடம் 15க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. ஜீப், பிஎம்டபியுள்யூ, ஆடி, மெர்சிடஸ்ஸ் பென்ஸ், ஹம்மர் என்று எக்கச்சக்க கார்கள் உள்ளன. அதில் மதிப்பு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு பின் பணக்கார கிரிக்கெட் வீரராக தோனி இருக்கிறார்.

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.1500 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோலியின் சொத்து மதிப்பு ரூ.1030 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தோனிக்கு விவசாய ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம், இந்தியா சிமெண்ட்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய தகவல் இல்லை. அதனையும் கணக்கிட்டு பார்த்தால் வருமானம் இன்னும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்