Homeகிரிக்கெட்தோனியின் 42வது பிறந்தநாளில், தோனி உருகி உருகி பாடிய பாடல் வீடியோவை பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட்...

தோனியின் 42வது பிறந்தநாளில், தோனி உருகி உருகி பாடிய பாடல் வீடியோவை பகிர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

-Advertisement-

கிரிக்கெட் உலகின் ஆல் டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். அதோடு ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத்தந்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாக இருந்தது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் இன்றளவும் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜூலை 7-ஆம் தேதி தனது 42 வது பிறந்த நாளை கொண்டாடிய தோனிக்கு உலகெங்கிலும் இருந்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். அதோடு அவருடன் ஏற்கனவே விளையாடிய மற்றும் தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

-Advertisement-

மைதானத்தில் எப்பொழுதுமே அமைதியாக காணப்படும் தோனி மைதானத்திற்கு வெளியேவும் அமைதியாகவே இருக்கக்கூடியவர் என்பது நாம் அறிந்ததே. அதோடு மற்ற வீரர்களை போல் பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் தோனி சமூக வலைதளங்களிலும் பெரிய நாட்டம் கொண்டவர் கிடையாது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் தோனிக்கு பாலிவுட் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று அதனை ஹம்மிங் செய்வதையும் அவர் விரும்புவார் எனவும் சிலர் கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலையில் தோனி பாடல் பாடும் வீடியோ ஒன்றினை சென்னை அணியின் முன்னாள் வீரரான மோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் : தோனி பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது அருகில் மோனு சிங் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோவில் தோனி “சலாமே இஷ்க் மேரி ஜான்” என்கிற ஹிந்தி பாடலை பாடுகிறார்.

-Advertisement-

மோஹித் சர்மா வெளியிட்ட இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய தோனிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்த வேளையில் மோஹித் சர்மா வெளியிட்ட இந்த பிறந்தநாள் வாழ்த்து வீடியோ அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி சீசனாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் 41 வயதிலும் அற்புதமாக அணியை வழிநடத்தி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய தோனி ரசிகர்களின் அன்புக்காகவும், பாசத்திற்காகவும் அடுத்த ஆண்டும் தான் ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதாக இன்ப அதிர்ச்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்