Homeகிரிக்கெட்தோனிக்கு இருந்த ஒரேயொரு கெட்டப்பழக்கம்.. புட்டுப்புட்டு வைத்த வாசிம் ஜாஃபர்.. என்ன தல இதுலாம்

தோனிக்கு இருந்த ஒரேயொரு கெட்டப்பழக்கம்.. புட்டுப்புட்டு வைத்த வாசிம் ஜாஃபர்.. என்ன தல இதுலாம்

-Advertisement-

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், இன்று வரை ஐபிஎல் தொடரில் விளையாடி தன் மீதான வெளிச்சம்ம் குறையாமல் அப்படியே தொடர்ந்து பார்த்து கொள்பவர் தோனி. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றிபெற தோனியின் கேப்டன்சி மிகமுக்கியக் காரணம். கடந்த சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்களின் அன்புக்காக இன்னொரு சீசன் விளையாடுவதே அவர்களுக்கு செய்யும் கைமாறாக இருக்கும் என்று தோனி கூறினார். அதற்கேற்றாற் போல் தோனி தனது உடல்தகுதி பேணி காத்து வருகிறார். ஐபிஎல் தொடரின் போது சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வந்து அனைவரையும் மிரள வைத்தார். தோனியின் உடல் பயிற்சி புகைப்படங்கள் கூட ரசிகர்களிடையே வேகமாக பரவியது.

-Advertisement-

இந்த நிலையில் தோனி தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். வீட்டின் வாசலில் கூடிய ரசிகர்களுக்காக தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து கைகளை ஆட்டி நன்றி தெரிவித்தார். காயம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் தோனி, பிறந்தநாளன்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார். இருப்பினும் தோனியை பிறந்தநாளை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடினார்கள்.

அதேபோல் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள், இளம் வீரர்கள் என்று அனைவரும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்தனவர். அந்த வகையில் தோனி குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் பேசுகையில், கிரிக்கெட் போட்டிகளின் போது விடப்படும் டிரிங்ஸ் பிரேக்கில் தோனி பெப்சி குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டார். ஃபிட்னஸ் என்று வரும் போது, அதிக சர்க்கரை அதிகமுள்ள உணவுகளையோ, குளிர்பானங்களை விளையாட்டு வீரர்கள் தவிர்த்து விடுவார்கள்.

-Advertisement-

ஆனால் தோனிக்கு ஒவ்வொரு நாளும் கோக் அல்லது பெப்சி குடிப்பதால் கவலை கொண்டதே இல்லை. அப்படியான மனிதர் தான் தோனி. சர்வதேச கிரிக்கெட்டை விளையாடிய போதும், அதிகமான அழுத்தங்களை எதிர்கொண்ட போதும், அவர் எதையும் மாற்றிக் கொண்டதே இல்லை. அதுதான் தோனியிடம் எனக்கு பிடித்தது என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை தொடங்கியதில் இருந்தே தோனி தினமும் 7 லிட்டர் வரை பால் குடிப்பேன் என்று தோனியே பெரும்பாலான நேரங்களில் கூறியுள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான பின், 7 லிட்டர் பால் என்பது மில்க் ஷேக்காக மாறியது. ஆனால் தோனி பெப்சி மற்ரும் கோக் குடிப்பது பற்றி ஜாஃபர் கூறியுள்ள கருத்துகளை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-Advertisement-

சற்று முன்