- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs WI: ஆடாமலே ஜெயித்த இந்திய அணி... வாரி சுருட்டிய அஸ்வின்... முதல் டெஸ்டில்...

IND vs WI: ஆடாமலே ஜெயித்த இந்திய அணி… வாரி சுருட்டிய அஸ்வின்… முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ள இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டீ-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது.

இதில் கடந்த 12ஆம் தேதி, முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸை பொருத்தவரை முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரங்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணியை பொறுத்தவரை அதிகபட்ச ரன்களாக அலிக் அதனாஸ் எடுத்த 47 ரன்கள் மட்டுமே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

முதல் இன்னிங்க்ஸை பொறுத்தவரை அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெடுகளை சாய்த்தார். ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதன்பின் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது .ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி சிறப்பான முறையில் விளையாடி ரன்களை குவித்தது.

இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழுக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மொத்த ரன்களை விட அதிகமாக இருந்தது. அதாவது இந்திய அணி 229 ரன்கள் எடுத்த நிலையில் தான் தனது முதல் விக்கெட்டை இழந்தது. ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.

- Advertisement 2-

மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஷ்வால் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சுமங்கில் ஆறு ரன்கள் எடுத்து வெளியேற, ஜெய்ஸ்வால் தந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணியை பொறுத்தவரை இந்தியாவிற்காக முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியல் ஜெய்பால் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் துணை கேப்டனான ரகானே இந்த போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்றே கூற வேண்டும். அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஜோடி பொறுமையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியை பொறுத்தவரை தனது 81 வது பந்தில் தான் கோலி முதல் பௌண்டரியை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் முடிவில் ஜடேஜா 37 ரண்களும் இசான் கிஷன் ஒரு ரண்களும் இருக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 421 ஆக இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 272 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரண்களுக்கு அடுத்தடுத்து தங்களது விக்கட்டுகளை இழக்க துவங்கினர்.

50.3 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அஸ்வினின் சுழலில் அனைவரும் சாய்ந்தனர் என்று கூறவேண்டும். இரண்டாவது இன்னிங்ஸை பொருத்தவரை அஸ்வின் ஏழு விக்கெட்டுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கட்டும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் செய்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யாமலேயே இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை அஸ்வின் மொத்தமாக 12 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்