- Advertisement 3-
Homeவிளையாட்டுசாதனைக்கு மேல் சாதனை.. சரியான கம்பேக்கை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. சுழலில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

சாதனைக்கு மேல் சாதனை.. சரியான கம்பேக்கை கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. சுழலில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானம் தொய்வாக இருந்ததோடு, 2வது பவுலிங் செய்யும் அணிக்கு ஓரளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் ஆடுகளத்தை விரைந்து புரிந்துகொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அட்டாக்கில் ரவிச்சந்திரன் அஸ்வினை வேகமாக கொண்டு வந்தார். இதனால் நிதானமாக ஆடிய தேஜ்நரைன் சந்தர்பால் 12 ரன்களிலும், கேப்டன் பிராத்வெயிட் 20 ரன்களிலும் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து அல்ஜாரி ஜோசப் 4 ரன்களில் அஸ்வின் பந்தில் வீழ்ந்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். மேலும் இந்தப் பட்டியலில் 16 வது இடத்தில் இருந்த தென்னாபிரிக்கா வீரர் ஸ்டெயினை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார்.

அதேபோல் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முரளிதரன் 1,347 விக்கெட்டுக்களுடன் முதலிடத்திலும், ஷேன் வார்னே ஆயிரத்தில் ஒரு விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 975 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும், அணில் கும்ப்ளே 956 விக்கெட்களுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement 2-

இந்தியர்கள் பட்டியலில் அணில் கும்ப்ளே முதலிடத்திலும், ஹர்பஜன்சிங் 711 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த தொடர் முடிவதற்குள் அஸ்வின் ஹர்பஜன்சிங்கை முந்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இறுதியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்தார். 93 போட்டிகளில் 33வது முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஆண்டர்சன் சாதனையை தகர்த்தார். அதேபோல் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்