சூதாட்ட பிரச்சனையில் சிக்கி இந்திய கிரிக்கெட் சரிவை சந்தித்திருந்த நிலையில் கேப்டன் பதவியை ஏற்ற சவுரவ் கங்குலி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் முகத்தையும் மாற்றினார். அமைதியாக காணப்பட்ட இந்திய வீரர்களை ஆக்ரோஷமாக மாற்றிக் காட்டியவர் கங்குலி தான். இந்திய அணியில் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை கிராமங்களில் இருந்து இந்திய அணிக்கு அழைத்து வந்தவர்.
தரமான பவுலிங் அட்டாக் இல்லாமலேயே தொடர்ந்து 3 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விராட் கோலியின் சீனியர் வெர்ஷனாக கங்குலி இருந்தவர். இன்றும் லார்ட்ஸ் பால்கனியை பார்க்கும் போது கங்குலியே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவார்.
இந்த நிலையில் கொல்கத்தாவின் இளவரசனாக கொண்டாடும் சவுரவ் கங்குலி இன்று 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எந்தவிட ஆடம்பரமும் இல்லாமல் தன் மகளுடன் எளிமையாக கொண்டாடி வருகிறார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களும், அவரது நண்பர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு கங்குலி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், கங்குலியின் முக்கிய தருணங்கள் அடங்கிய புகைப்படங்கள் வீடியோவாக ஒருங்கிணைக்கப்பட்டு பகிரப்பட்டது. ஆனால் அந்த வீடியோவில் கங்குலி புகைப்படத்தோடு இர்பான் பதானின் புகைப்படமும் இணைந்திருந்தது. சரியாக 1.02 நொடியில் இர்பான் பதான் புகைப்படம் இருந்தது.
இதனை பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். சவுரவ் கங்குலி பதிவிட்டுள்ள பிறந்தநாள் வீடியோவிலேயே இதுபோன்ற தவறுகள் நடந்திருப்பதால் ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல் வீடியோவை யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.