Homeகிரிக்கெட்லக்னோ அணியில் கூடும் பழைய நண்பர்கள்.. பயிற்சியாளராக லாங்கர் ஒப்பந்தம்? கம்பீருக்கு ஜாலி தான்!

லக்னோ அணியில் கூடும் பழைய நண்பர்கள்.. பயிற்சியாளராக லாங்கர் ஒப்பந்தம்? கம்பீருக்கு ஜாலி தான்!

-Advertisement-

2021ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு முதல் 10 அணிகளாக உயர்த்தப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணியும், கேஎல் ராகுல் தலைமையில் லக்னோ அணியும் உருவாக்கப்பட்டன. அதில் ஏற்கனவே புனே அணியை வாங்கிய ஹர்ஷ் கொயங்கா, லக்னோ அணியை வாங்கினார்.

இந்த அணியின் கேப்டனாக கே எல் ராகுலும், பயிற்சியாளராக ஆன்ட்டி பிளவரும் நியமிக்கப்படனர். ஆலோசகராக கவுதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆண்டி பிளவர் தலைமையிலான பயிற்சியில் லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டாலும், கோப்பையை அந்த அணியால் வெல்ல முடியவில்லை. இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் ஆண்டி பிளவரை மாற்ற லக்னோ நிர்வாகம் முடிவு செய்தது.

-Advertisement-

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் சிக்கிய போது ஆஸ்திரேலிய அணியின் கவுரவத்தை மீட்க ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எப்படி தொடக்க வீரராக களமிறங்கி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவாரோ, அதே பாணியிலான பயிற்சியை லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கினார். ஆஸ்திரேலியாவின் குணாதிசியத்தையே மாற்றினார்.

அதேபோல் வீரர்களை எந்த அளவிற்கு பாராட்டுவாரோ, அதே அளவிற்கு விமர்சனமும் செய்யக் கூடியவர் ஜஸ்டின் லாங்கர். அதனை பயிற்சியின் போதும் ஜஸ்டின் லாங்கர் வெளிப்படுத்துவார். இதனை அமேசானில் வெளியாகிய டெஸ்ட் இணைய தொடரிலேயே பார்க்க முடியும்.  இப்படிப்பட்ட சூழலில் ஜஸ்டின் லாங்கரும், கௌதம் கம்பீரும் ஒரே அணியில் பெரிய இடத்தில் இருக்கப் போவது, எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பி விடுகின்றனர்.

-Advertisement-

சில நாட்களுக்கு முன் ஐபிஎல் அணிகளுக்கு இந்திய முன்னாள் வீரர்களையே பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கம்பீர் குரல் கொடுத்திருந்தார். ஆனால் லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கம்பீர் அணியிலேயே ஜஸ்டின் லாங்கரை நியமனம் செய்யவுள்ளது முரண்பாடாக உள்ளது.

ஜஸ்டின் லாங்கரை லக்னோ அணிக்கு கொண்டு வரும் யோசனையையும் கம்பீர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றில் வரும் ஜஸ்டின் லாங்கரை சந்திக்க லக்னோ அணி நிர்வாகிகள் இங்கிலாந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகிய்டுள்ளது.

-Advertisement-

சற்று முன்