Homeகிரிக்கெட்டெக்சாஸ் சூப்பர் அணியில் இடம்பிடித்துள்ள 3 முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்.. ஆட்டம் சும்மா தெறிக்கவிட போகுது

டெக்சாஸ் சூப்பர் அணியில் இடம்பிடித்துள்ள 3 முன்னாள் சிஎஸ்கே வீரர்கள்.. ஆட்டம் சும்மா தெறிக்கவிட போகுது

-Advertisement-

கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்துவதற்காக மேஜர் கிரிக்கெட் லீக் என்ற தொடர் ஐபிஎல் பாணியில் நடத்தப்படுகிறது. இதில் ஐபிஎல் நிர்வாகத்தை சேர்ந்த மும்பை இந்தியன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் ஆகிய நான்கு அணிகளும் அமெரிக்க நகரங்களை மையமாக வைத்து அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸை மையமாக வைத்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வாங்கி இருக்கிறது. இந்தத் தொடர் நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

-Advertisement-

இதன் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே வின் டெக்ஸாஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று முன்னாள் சிஎஸ்கே வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் டுபிளசிஸ், சென்னை அணிக்காக 2011ம் ஆண்டு முதல் விளையாடி வரும் டுபிளசிஸ் 92 போட்டிகளில் சிஎஸ்கேவுக்காக விளையாடி 2721 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது 39 வயதான டுபிளசிஸ் ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக விளையாடி வரும் நிலையில் தற்போது டெக்ஸாஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

-Advertisement-

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பிராவோ. சிஎஸ்கே அணியின் முக்கிய தூணாக விளங்கும் பிராவோ. 140 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக கைப்பற்றி இருக்கிறார். மேலும் இரண்டு முறை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான பர்ப்புல் தொப்பியையும் பிராவோ பெற்றிருக்கிறார்.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராகவும் பிராவோ பணியாற்றி வரும் நிலையில் தற்போது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் களமிறங்கியுள்ளார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகிர். 44 வயதான இம்ரான் தாகிர் சிஎஸ்கே அணிக்காக 35 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். ராயுடு கடைசி நேரத்தில் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக இம்ரான் தாஹிர் சேர்ந்திருக்கிறார்.

-Advertisement-

சற்று முன்