- Advertisement 3-
Homeவிளையாட்டுசூப்பர் கிங்ஸ் அணியின் தரமான பிளேயிங் லெவன் உத்தேசமாக இது தான்... ஆரம்பமாகும் சரவெடி.. தெறிக்கவிடப்போகும்...

சூப்பர் கிங்ஸ் அணியின் தரமான பிளேயிங் லெவன் உத்தேசமாக இது தான்… ஆரம்பமாகும் சரவெடி.. தெறிக்கவிடப்போகும் சிஎஸ்கே-வின் தம்பிகள்

- Advertisement-

ஐபிஎல் தொடரைப் போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட அணிகள் முதலீடு செய்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட எஸ் லீக் டி20 தொடரில் ஜொகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், மும்பை கேப்டவுன்ஸ், ப்ரீடோரியா கேப்பிட்டல்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

அதேபோல் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், சான் பிராசிஸ்டோ யூனிகார்ன்ஸ், சியாட்டல் ஓர்காஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் என்று அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், 15 போட்டிகள் நடக்கவுள்ளன. அதன்பின்னர் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதன் முதல் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் – லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளது.

- Advertisements -

இந்த டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர் டூ பிளஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜொகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதனால் டிஎஸ்கே அணிக்கு டூ பிளஸிஸ் – டெவான் கான்வே கூட்டணி தொடக்கம் கொடுக்க உள்ளது. டெவான் கான்வே டிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளார்.

இதையடுத்து 3வது வீரராக அமெரிக்கா அணிக்காக ஆடி வரும் சாய்தேஜா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா அணியின் முக்கிய வீரராக உள்ள இவர், சிறந்த மிடில் ஆர்டர் வீரராவார். அதேபோல் 4வது இடத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று விளையாடி வரும் மிலிந்த் குமார் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் ஆஃப் ஸ்பின்னும் வீசவார் என்பதால், ஆல் ரவுண்டராக டிஎஸ்கே அணிக்கு செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement-

5வது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் களமிறங்குவது நிச்சயம். முதல் முறையாக சூப்பர் கிங்ஸ் அணிக்காக மில்லர் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்குவதை பார்க்க சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் 6வது இடத்தில் சிஎஸ்கே அணியின் மிட்செல் சாண்ட்னர், 7வது இடத்தில் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோ களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட்டில் மணிக்கட்டை பயன்படுத்தி ஸ்பின் செய்யும் விரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கியம் என்பதால், ஜியா ஷேசாத் 8வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கொயட்ஸி 9வது இடத்திலும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் கடைசி 2 இடங்களில் உள்ளூர் வீரர்களான கால்வின் சால்வேஜ் மற்றும் ரஸ்டி தெரோன் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ளூர் வீரர்களை காட்டிலும் சிஎஸ்கே வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சற்று முன்