Homeகிரிக்கெட்அடிப்படையிலேயே ரோகித் சர்மா தப்பு பன்றாரு... தோனிக்கு இதெல்லாம் நல்லா தெரியும் - முகமது கைஃப்...

அடிப்படையிலேயே ரோகித் சர்மா தப்பு பன்றாரு… தோனிக்கு இதெல்லாம் நல்லா தெரியும் – முகமது கைஃப் பேச்சு

-Advertisement-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்து மீண்டும் ஒரு கோப்பையை தவறவிட்டது. கடைசியாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தோனியின் தலைமையில் 2013 ஆம் ஆண்டு கடைசியாக சாம்பியன் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணி அதன்பிறகு இதுவரை ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்து வருகிறது.

விராட் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தாலும் ஐசிசி கோப்பையை கைப்பற்றாதது அனைவரது மத்தியிலுமே வருத்தத்திற்கு உள்ளான விடயமாக இருந்து வந்தது. அதன் காரணமாக 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோலியிடமிருந்து கேப்டன் பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. அப்போது ரோஹித் மற்றும் புதிய பயிற்சியாளர் டிராவிடின் உதவியுடன் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-Advertisement-

அவ்வேளையில் 2022-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியிலும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற தவறியது. இப்படி அடுத்தடுத்து இந்திய அணி ஐசிசி கோப்பைகளை தவறவிடுவது வாடிக்கையாக்கியுள்ள வேளையில் தோனியின் தலைமையை தவறவிடுவதாக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் இந்திய அணியை ஐசிசி கோப்பையை வெல்லும் அணியாக மாற்றும் திறமை ரோகித்திடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனியின் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதேபோன்று ரோகித் சர்மாவின் தலைமையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். ரோஹித் சர்மா போன்ற ஒருவரால் அணியை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

-Advertisement-

ஐசிசி தொடர்களில் வெற்றி பெறும் வீரர்களையும், அணியையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளதாகவும் நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை தவறவிடுவதற்கு காரணமே அணித்தேர்வில் நடக்கும் தவறுகள் தான் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அணித்தேர்வுகளில் தோனி தவறு செய்ய மாட்டார். அவருக்கு எதை பதினோரு பேர் அணிக்கு தேவை என்பது நன்கு தெரியும். ஆனால் ரோகித் தலைவராக இருக்கும் அணியில் அணித்தேர்வின் போது சில தவறுகள் நடைபெறுகின்றன.

குறிப்பாக கடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக பந்துவீசி வந்த வேளையில் அவருக்கு பதிலாக அஸ்வினை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்த டி20 உலக கோப்பையில் சாஹல் தான் இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற சில தவறுகள் தான் அணியை தோல்விக்கு அழைத்துச் செல்கின்றன. எனவே இனிவரும் தொடர்களில் சரியான அணியை தேர்வு செய்தால் நிச்சயம் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணியும் ஐசிசி கோப்பை கைப்பற்றும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்