Homeகிரிக்கெட்புதிய ஹேர் ஸ்டைலுடன் சென்னை வந்திறங்கிய தோனி. இதுக்கு தான் வந்திருக்கிறாராம். அப்போ இனி மாஸ்...

புதிய ஹேர் ஸ்டைலுடன் சென்னை வந்திறங்கிய தோனி. இதுக்கு தான் வந்திருக்கிறாராம். அப்போ இனி மாஸ் தான்

-Advertisement-

மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் பின்னர் சென்னை அணி கேப்டன் தோனி, நேராக மும்பை சென்று காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதன் பின்னர் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் 4 வாரங்களாக ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதி குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி, காயத்தில் இருந்து குணமடைந்தது தெரியவந்தது. இந்த நிலையில் திடீரென சிஎஸ்கே கேப்டன் தோனி தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார். எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எல்ஜிஎம்.

-Advertisement-

தோனி முதல்முறையாக சினிமாவில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். நடிகர் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்கம் மற்றும் இசைப் பணிகளை ரமேஷ் தமிழ்மணி செய்துள்ளார். காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக தோனி தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிககள் ஒன்றுகூடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற பின் முதல்முறையாக தோனி சென்னை வந்துள்ளார்.

-Advertisement-

இதனால் சென்னை விமான நிலையத்திலேயே கூடிய ரசிகர்கள், தோனியின் பெயரை கூறி ஏர்போர்ட்டையே அதிர வைத்தனர். கறுப்பு டீ சர்ட் அணிந்து வந்த சென்னை அணி கேப்டன் தோனி, புதிய ஹேர் ஸ்டைலுடன் காணப்பட்டார். இதையடுத்து தோனி புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தோனி தயாரித்துள்ளதால் எல்ஜிஎம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த சீசனுக்காக அப்டேட் பற்றி தோனி மனம் திறப்பாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும், தமிழ் திரையுலகில் தயாரிப்பை தொடங்கியது ஏன் என்றும் தோனி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்