- Advertisement 3-
Homeவிளையாட்டுஜெயந்த் யாதவ் செய்த தில்லு முல்லு.. 53 நிமிடத்தில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசிய...

ஜெயந்த் யாதவ் செய்த தில்லு முல்லு.. 53 நிமிடத்தில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசிய அணி.. வெளுத்துக்கட்டிய தமிழக வீரர்!

- Advertisement-

துலீப் டிராபி தொடர் அரையிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டல அணியை எதிர்த்து தெற்கு மண்டல அணி மோதியது. வடக்கு மண்டல அணிக்கு ஜெயந்த் யாதவும், தெற்கு மண்டல அணிக்கு ஹனுமா விஹாரியும் கேப்டனாக பொறுப்பேற்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வடக்கு மண்டல அணி 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பின்னர் களமிறங்கிய தெற்கு மண்டல அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வடக்கு மண்டல அண்இ 3 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட்டில், ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

- Advertisements -

இதனால் வடக்கு மண்டல அணிக்கு சாதகம் ஏற்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் வடக்கு மண்டல அணி 215 ரன்களையே இலக்காக நிர்ணயித்தது. இதனால் எளிய இலக்கை 4வது நாள் முடிவதற்கு எட்டுவதற்காக தெற்கு மண்டல களமிறங்கியது. ஒரு கட்டத்தில் ஆட்டத்தை தெற்கு மண்டல அணியினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் எப்படி வெற்றிபெறுவது என்று தெரியாமல் வடக்கு மண்டல அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி, தில்லு முல்லு செய்ய தொடங்கினார். வேண்டுமென்றே ஒவ்வொரு பந்திற்கும் ஆலோசை செய்வது, பவுலர்களை மாற்றுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது என்று நேரத்தை வீணடிக்க தொடங்கினார்.

- Advertisement-

கிட்டத்தட்ட கடைசி நாளில் 55 நிமிடங்களில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வடக்கு மண்டல அணியின் பந்துவீச்சாளர்கள் வீசினர். இதன் மூலம் போட்டியை டிரா செய்து முன்னிலை பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்ற நோக்கத்தில் நார்த் சோன் வீரர்கள் செயல்பட்டனர். எனினும் இதனை முறியடிக்கும் வகையில் தெற்கு மண்டல வீரர்கள் அதிரடியாக விளையாடினர். மாயங் அகர்வால் 57 பந்துகளில் 54 ரன்கள், ஹனுமா விகாரி 42 பந்துகளில் 43 ரன்களும் திலக் வருமா 19 பந்துகளில் 25 ரன்களும் அடித்தார்கள்.

இந்த நிலையில் அன்றைய நாள் முடியும் தருவாயில் இருந்தது. அப்போது களத்துக்கு வந்த சாய் கிஷோர் இரண்டு சிக்ஸர்கள் அடித்து சவுத் சோன் அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி நேரத்தில் தெற்கு மண்டல அணி 36 ஓவரில் 219 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நேரத்தை கடத்தி வெற்றி பெற்று விடலாம் என நினைத்த சதியை தெற்கு மண்டல அணி முறியடித்து அசத்தியது.

 

சற்று முன்