Homeகிரிக்கெட்துணை கேப்டன்சி பதவி கொடுத்ததற்கு காரணமே வேற.. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ரஹானே பேட்டிங் சராசரி...

துணை கேப்டன்சி பதவி கொடுத்ததற்கு காரணமே வேற.. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ரஹானே பேட்டிங் சராசரி தெரியுமா?

-Advertisement-

இந்திய அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்று கொடுத்தவர் ரஹானே. அதன்பின்னர் மோசமான ஃபார்மில் இருந்த அவர் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயரின் காயமடைய, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 89 மற்றும் 46 ரன்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான கம்பேக்கை ரஹானே நிகழ்த்தினார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டார்.

-Advertisement-

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 மாதங்களாக இந்திய அணியில் இல்லாத ஒரு வீரர், ஒரேயொரு போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டதால் துணை கேப்டன் பதவி கொடுப்பதா என்ற சவுரவ் கங்குலி உட்பட முன்னாள் வீரர்களும், ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அஜிங்கியா ரஹானே உட்பட இந்திய வீரர்கள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் ரஹானே வைத்து பேட்டிங் சராசரி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 90.71 சராசரியில் 635 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ரஹானேவின் பேட்டிங் சராசரி 102.8ஆக உள்ளது.

-Advertisement-

2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது கிங்ஸ்டன் மற்றும் ஜமாய்க்கா மைதானங்களில் சதம் விளாசி மிரட்டியவர் தான் அஜிங்கியா ரஹானே. இந்திய ஆடுகளங்களை கடந்து வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்படக் கூடியவர் அஜிங்கியா ரஹானே. இதன் காரணமாகவே ரஹானேவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கேஎல் ராகுல், புஜாரா உள்ளிட்டோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், விராட் கோலி, அஸ்வின் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக இருக்கிறார்கள். இதில் அஸ்வின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில் சந்தேகம் உள்ள நிலையில், ரஹானேவுக்கு துணை கேப்டன்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்