- Advertisement -
Homeவிளையாட்டுமும்பை முடிவால் விலகிய சச்சின்?... இணையத்தில் பத்த வெச்ச தகவல்.. கடைசியில் தெரிய வந்த உண்மை..

மும்பை முடிவால் விலகிய சச்சின்?… இணையத்தில் பத்த வெச்ச தகவல்.. கடைசியில் தெரிய வந்த உண்மை..

- Advertisement-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தொடர்ந்து மும்பை அணி தொடர்பான செய்திகள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.

ஐபிஎல் கண்ட தலைசிறந்த கேப்டனாக ரோஹித் ஷர்மா இருந்த போதிலும் அவரை மாற்றி விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது. மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்த ரோஹித் ஷர்மாவால் கடந்த இரண்டு சீசன்களிலும் மும்பை அணியை இறுதி போட்டிக்கு முன்னேற வைக்க முடியவில்லை. ஆனால், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி வெளியேறி இருந்தது.

- Advertisement -

இதனையடுத்து அடுத்த சீசனில் நிச்சயம் மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்கள் தற்போது அப்படியே எதிர்மாறாக செய்து கொண்டிருக்கிறார்கள். குஜராத் அணிக்காக இரண்டு சீசன்களில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அந்த சமயத்தில் மும்பை அணி சிறந்த வீரர்களை அணியில் சேர்த்து தான் கோப்பையை கைப்பற்றுகிறது என பேசினார். இதனால், அவர் மீது மும்பை ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர்.

அப்படி இருந்தவரை மீண்டும் மும்பை அணியில் சேர்த்ததுடன் பலரும் மும்பை அணியை பின்பற்ற காரணமாக இருக்கும் ரோஹித்தை கேப்டன் பதவியில் இருந்து மாற்றி விட்டு ஹர்திக்கை கேப்டனாக்கியது ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இதனால், முழுக்க முழுக்க ரோஹித், ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய விவாதங்கள் தான் எந்த பக்கம் திரும்பினாலும் நடந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement-

இதற்கு மத்தியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரும் மும்பை அணியின் முடிவால் அதிருப்தியில் இருப்பதாக சில தகவல் வெளியானது. அதே போல, ரோஹித், பும்ரா மற்றும் சூர்யகுமார் உள்ளிட்டோர் சென்னை உள்ளிட்ட வேறு அணிகளுக்கு ஆட இருப்பதாக வெளியாகும் தகவல்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியானது. சச்சினே மும்பை முடிவால் கடுப்பானதாகவும் இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவ, தற்போது இது வெறும் வதந்தி தான் என்றும், சச்சின் டெண்டுல்கர் மும்பை அணியில் ஆலோசகராக தொடர்வார் என்றும் உறுதியான தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பத்தி விட்டு எரியும் மும்பை அணி விவகாரத்தில் சச்சின் பற்றிய தகவலும் வைரலாக இறுதியில் அது வெறும் வதந்தி தான் என்பதும் உறுதியாகி உள்ளது.

சற்று முன்