- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே ஒரு வெத்து அணி தான்.. தோனி மட்டும் இல்லைனா.. லாஜிக்குடன் சொன்ன வாசிம் ஜாஃபர்

சிஎஸ்கே ஒரு வெத்து அணி தான்.. தோனி மட்டும் இல்லைனா.. லாஜிக்குடன் சொன்ன வாசிம் ஜாஃபர்

- Advertisement-

16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியை போல் ஒரு வெற்றிகரமான அணி இருந்ததே இல்லை என்று கூறலாம். என்னதான் மும்பை அணி 5 முறை கோப்பைகளை வென்றிருந்தாலும், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தொடர்ச்சியாக முன்னேறியதே இல்லை. சென்னை அணி விளையாடியுள்ள 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

இதன் காரணமாகவே சென்னை அணி வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. மும்பை, குஜராத், ராஜஸ்தான் அணிகள் கோப்பைகளை வென்றிருந்தாலும், சென்னை அணியை போல் சீரான ஆட்டத்தை எந்த அணியும் வெளிப்படுத்தியதே இல்லை. அதற்கு சென்னை அணியின் கேப்டன் தல தோனி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

- Advertisements -

எத்தனை பேட்ஸ்மேன்கள், எத்தனை பந்துவீச்சாளர்கள் மாறினாலும் சென்னை அணியின் நிரந்தர கேப்டனாக தோனியே செயல்பட்டு வருகிறார். எந்த வீரருக்கு என்ன வரும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்துவதே சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் சிஎஸ்கே அணி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், சென்னை அணியில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனியை நீக்கினால், அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாது. தோனி இல்லையென்றால், சிஎஸ்கே வலியான அணியாக இருக்காது. இதுபோன்ற ஒரு அணியை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். சென்னை அணியின் பவுலிங் இம்முறை அனுபவமற்றதாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே இதுவரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதில்லை.

- Advertisement-

பதிரானா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோர் சென்னை அணிக்கு புதிய வீரர்கள். தீபக் சஹரால் பாதி தொடரில் விளையாட முடியவில்லை. மகீஷ் தீக்சனாவும் ஐபிஎல் தொடரில் அவ்வளவு பெரிய வீரராக உருவாகவில்லை. மொயின் அலி பெரும்பாலான போட்டியில் பந்துவீசவே அழைக்கப்படவில்லை. இதுபோன்ற ஒரு பவுலிங் அட்டாகை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி தோனியால் வெற்றிபெற முடிகிறது. சிஎஸ்கே அணிக்கு தோனியால் மட்டுமே வெற்றி கிடைக்கிறது. தோனி வெளியேறிவிட்டால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வருவதே கஷ்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்