Homeகிரிக்கெட்யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங்.. சுப்மன் கில்லுக்கு 3வது இடம்.. மாற்றத்தை அறிவித்த ரோகித் சர்மா!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஓப்பனிங்.. சுப்மன் கில்லுக்கு 3வது இடம்.. மாற்றத்தை அறிவித்த ரோகித் சர்மா!

-Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதிய பயணத்தில் இந்தியா அணி கால் பதிக்கிறது. இதனால் இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இந்தத் தொடரை தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய அணி பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா பேசிய போது, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகிறார். கவாஸ்கருக்கு பின் 21 வயதில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் முதல் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரராக களமிறங்கி வந்த சுப்மன் கில் இனி 3வது இடத்தில் களமிறங்குவார்.

-Advertisement-

மேலும் இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள். 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதே எங்களின் திட்டம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு வந்ததன் மூலம் மீண்டும் இடதுகை – வலதுகை தொடக்க கூட்டணி களமிறங்கவுள்ளது. இடதுகை தொடங்க வீரருக்காக நாங்கள் நாட்கள் காத்திருந்தோம்.

இடதுகை பேட்ஸ்மேனுக்காக இடத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பூர்த்தி என்ற நம்பிக்கை உள்ளது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என்று நினைக்கிறோம். மேலும் சீனியர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து டெஸ்ட் போட்டியில் அணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும். சுப்மன் கில்லை 3வது இடத்தில் களமிறக்குவது அவரின் முடிவு தான்.

-Advertisement-

சுப்மன் கில் நேரடியாக ராகுல் டிராவிட்டிடன் இதுகுறித்து பேசினர். ஏனென்றால் அவரின் தொடக்க நாட்கள் முதல் இந்தியா ஏ அணிக்கான பயணம் வரை 3 அல்லது 4 ஆகிய இடங்களில் தான் விளையாடி இருக்கிறார். அதனால் அவராகவே ராகுல் டிராவிட்டிடம் நேரடியாக சென்று விருப்பத்தை கூறினார். அதன்பின்னரே நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம்.

இந்த மாற்றம் நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்டோர் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை களமிறக்காமல் ரோகித் சர்மா தவறு செய்திருந்தார். தற்போது அஸ்வினுக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்