Homeகிரிக்கெட்6 அடி 9 அங்குலம்... வலைப்பயிற்சியில் பாக்கிஸ்தான் வீரர்களை அசரவைத்த இந்திய வீரர்.. எங்க அணிக்கு...

6 அடி 9 அங்குலம்… வலைப்பயிற்சியில் பாக்கிஸ்தான் வீரர்களை அசரவைத்த இந்திய வீரர்.. எங்க அணிக்கு பந்து வீசுவீங்களா என கேட்ட கோச்..

-Advertisement-

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்குப் பிறகு தற்போது தான் இந்தியாவில் கால்பதித்துள்ளது. அந்த அணி வீரர்கள் இந்தியாவில் வந்து இறங்கிய உடனே தங்களது பயிற்சி போட்டியில் ஈடுபட துவங்கினர்.

செப்டம்பர் 27ஆம் தேதி மாலை இந்தியா வந்தடைந்தது பாகிஸ்தான் அணி வீரர்கள், அதற்கு அடுத்தநாள் காலையிலேயே ஐசிசி உலக கோப்பை காண தீவிர பயிற்சியில் இறங்கினர். ஹைதராபாத்தில் உள்ள பாகிஸ்தான் அணி அங்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக செப்டம்பர் 29 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் வாம்அப் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

அதனை தொடர்ந்து, அக்டோபர் 6ஆம் தேதி, இந்த உலகக்கோப்பை தொடருக்கான முதல் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், அக்டோபர் 10ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஹைதராபாத்திலேயே நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே பாக்கிஸ்தான் அணி நேராக ஹைதராபாத் வந்து இறங்கி அங்கு தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களின் பார்வையும் அந்த அணியின் மீது இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு இந்திய பவுலர் அந்த ப்ராக்டிஸ் ஸ்டேஷனில் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

-Advertisement-

6 அடி 4 அங்குலம் உள்ள அந்த வேகப்பந்து வீச்சாளரின் பெயர் பந்துவீச்சாளரான நிஷாந்த் சாரனு. வலைப்பயிற்சியில் ஈடுபடும் பாகிஸ்தான் பேட்ஸ்மின்களுக்காக அவர் பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சில் அதிக பவுசங்கள் இருப்பது குறிப்படத்தக்கது. அவரது பந்துவீச்சை பார்த்து ஆச்சர்யப்பட்ட பாக்கிஸ்தான் வீரர் பக்கர் சமான், நிஷாந்த் அவரது பவுலிங்கில் இன்னும் சற்று வேகத்தை கூடினால் சிறப்பான ஒரு நிலைக்கு செல்வர் என்று கூறியுளளார்.

நிஷாந்த் இது குறித்து கூறுகையில், “நான் தற்போது 125 முதல் 13 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறேன் ஆனால் மோர்னே மோர்கல் என்னிடம் வேகத்தை அதிகப்படுத்த சொன்னார். அதேபோல் ஐபிஎல் போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிக்காக நெட்சில் என்னால் பந்து வீச முடியுமா என்றும் அவர் கேட்டார். என்னுடைய லட்சியம் என்பது வைட் பால் மற்றும் ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது தான். தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடும் என்பது தான் என்னுடைய குறுகிய கால இலக்காக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது பாக்கிஸ்தான் அணிக்கு பவுலிங் கோச்சாக இருக்கிறார் மோர்னே மோர்கல். இவரே லக்னோ அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். இதன் காரணமாக நிஷாந்திற்கு ஐபிஎல் போட்டிகளில் லக்னோ அணிக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்