- Advertisement -
Homeவிளையாட்டுஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்திற்கு எதிரணி பௌலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? பார்ட் டைம் பௌலருக்கு...

ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டத்திற்கு எதிரணி பௌலர் கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா? பார்ட் டைம் பௌலருக்கு இதெல்லாம் தேவையா என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

- Advertisement-

நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மயிர்க்கூச்செறியும் அனுபவமாக அமைந்தது. இந்த போட்டியில் 151 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இறங்கிய ராஜஸ்தான் அணியின் 21 வயது இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே தனது அதிரடி இன்னிங்ஸை தொடங்கினார்.

பார்ட் டைம் பவுலரும் கேப்டனுமான நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக 26 ரன்கள் சேர்த்தார்.  முதல் இரண்டு பந்துகளிலேயே 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்து இரண்டு பவுண்டரிகளையும் அந்த ஓவரில் வீசினார். முதல் ஓவரின் அதிரடி தொடக்கம் அவருக்கு அபாரமான நம்பிக்கையைக் கொடுக்க, அடுத்தடுத்து வந்த ஓவர்களிலும் அவர் அதிரடி தொடர 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். ஐபிஎல் தொடரிலேயே மிகக்குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட மின்னல் வேக அரைசதமாக அவரது இந்த இன்னிங்ஸ் சாதனைப் படைத்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 47 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தார். நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியில் நல்ல பவுலர்கள் இருக்கும் போது ஏன் முதல் ஓவரை தான் வீசவேண்டும் என்ற மோசமான யோசனையை எடுத்தார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.

இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய நிதிஷ் ராணா “ஜெய்ஸ்வால் இந்த சீசன் முழுவதும் முதல் ஓவரை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்து வருகிறார். அதனால் நான் முதல் ஓவரை வீசினால் பெரிதாக பாதகம் இருக்காது என நினைத்த்தேன். ஆனால் முதல் ஓவரையே அவர் இப்படி ஆடுவார் என தெரியாது. நேற்று அவர் என்ன ஷாட் அடிக்க நினைத்தாலும் அது சரியாக அமைந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் சேர்த்தால்தான் சரியாக இருக்கும். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement-

சற்று முன்