- Advertisement -
Homeவிளையாட்டுஆடுனது இரண்டே டெஸ்ட்.. அதுக்குள்ள சச்சின், சேவாக்கின் தரமான சாதனையை உடைத்து சரித்திரம் எழுதிய நிதிஷ்...

ஆடுனது இரண்டே டெஸ்ட்.. அதுக்குள்ள சச்சின், சேவாக்கின் தரமான சாதனையை உடைத்து சரித்திரம் எழுதிய நிதிஷ் ரெட்டி..

- Advertisement-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வரும் இந்திய அணியின் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி, இரண்டு போட்டிகள் ஆடி முடிப்பதற்குள் சேவாக், முரளி விஜய், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் சாதனையை முறியடித்து தனது பெயரை ஆஸ்திரேலிய மண்ணில் பொரித்து சரித்திரம் படைத்துள்ளார். முதல் டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் சற்று திணறி இருந்தது. ஆனால், அதன் 2 வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் மற்றும் கோலி ஆகிய இருவரும் சதமடித்ததால் இந்திய அணி அபார இலக்கையும் ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.

இதில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் கோட்டை விட்டதன் காரணமாக தோல்வி அடையும் சூழல் உருவாகி இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித், கோலி உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதும் பேட்டிங் ஆர்டர் குலைந்து போக முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.

இதனிடையே இந்த இரண்டு டெஸ்டில் இந்திய அணிக்கு ஒரு சில பாசிட்டிவான விஷயங்களும் அரங்கேறி இருந்தது. டி20 போட்டிகளில் மட்டுமே சர்வதேச அரங்கில் ஆடியுள்ள நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகி இருந்தார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் கடந்த ஒரே இந்திய வீரராக இருந்த நிதிஷ் ரெட்டி, இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்திருந்தார்.

தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் இரண்டு இன்னிங்ஸ்களில் இந்திய அணியில் தலா 40 ரன்கள் கடந்த ஒரே வீரர் நிதிஷ் ரெட்டி தான். தான் இதுவரை ஆடிய நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலேயே மூன்று இன்னிங்ஸ்களில் அதிக ஸ்கோர் அடித்த வீரராக இருந்த நிதிஷ் ரெட்டி, வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

- Advertisement-

அது மட்டுமில்லாமல் ஸ்டார்க், கம்மின்ஸ் என அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்கள் இருந்தும் சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார் நிதிஷ் ரெட்டி. இரண்டே டெஸ்ட்களில் ஏழு சிக்ஸர்கள் அடித்துள்ள நிதிஷ் ரெட்டி மிக முக்கியமான ஒரு சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரராக சேவாக் முதலிடத்தில் (6 சிக்ஸர்கள்) இருந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக முரளி விஜய், ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலரும் 5 சிக்ஸர்களை ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அடித்துள்ளனர். அதனை இரண்டே போட்டிகளில் முறியடித்துள்ள நிதிஷ் ரெட்டி, ஏழு சிக்ஸர்களை அடித்துள்ளதுடன் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை தற்போதே பெற்றுவிட்டார். இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்க, அதில் நிறைய சிக்ஸர்களை பறக்கவிட்டு புதிய மைல்கல்லை நிதிஷ் ரெட்டி பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்