- Advertisement 3-
Homeவிளையாட்டுஆஸ்திரேலியா இல்ல.. செமி ஃபைனல் வரபோறது இந்த 4 டீம் தான்.. இந்தியாவுடன் கோதாவில் குதிக்கும்...

ஆஸ்திரேலியா இல்ல.. செமி ஃபைனல் வரபோறது இந்த 4 டீம் தான்.. இந்தியாவுடன் கோதாவில் குதிக்கும் 3 அணிகள்?

- Advertisement 1-

டி20 உலக கோப்பைத் தொடரின் மிக முக்கியமான போட்டிகள் இனி வரும் நாட்களில் தான் அரங்கேற உள்ளது. லீக் சுற்றுப்போட்டியில் வெறுமென நடந்து முடிந்திருந்தாலும் இதிலிருந்து அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தது கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் பெரிய அளவில் காட்டியுள்ளது.

மறுபக்கம் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றின் குரூப் 1-ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. இன்னொரு புறம் குரூப் 2வில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது.

குரூப் 2வில் மூன்று பெரிய அணிகள் இருப்பதால் இங்கே தான் அதிக சவால்கள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளை விட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அசுர பலத்துடன் விளங்குவதால் அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே வேளையில் லீக் சுற்றில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளையும் நாம் எளிதில் எடை போட்டு விட முடியாது. எப்படிப்பட்ட நேரத்தில் வேண்டுமானாலும் போட்டிகளை தங்கள் பக்கம் திருப்பும் திறன் படைத்த வீரர்கள் இந்த அணிகளிலும் நிறைய பேர் உள்ளதால் நிச்சயம் சூப்பர் 8 சுற்றில் இருந்து யார் அரை இறுதிக்கு முன்னேறுவார்கள் என்பதே பெரிய ஒரு கேள்வியாக தான் இருக்கும் என்று தெரிகிறது.

- Advertisement 2-

அப்படி ஒரு சூழலில் இரண்டு பிரிவுகளில் இருந்தும் எந்தெந்த இரண்டு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது பற்றி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் தேர்வு செய்துள்ள நான்கு அரை இறுதி அணிகள் பெரிய அளவில் வியப்பை தான் ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளை தேர்வு செய்யாத ரஷீத் லத்தீப், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஒன்றிலிருந்தும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் குரூப் 2 வில் இருந்தும் அரை இறுதிக்கு முன்னேறும் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை பின்தள்ளி ஆப்கானிஸ்தானை முன்னிறுத்தி அவர் தெரிவித்துள்ள கருத்துதான் பலரையும் வியப்பாக திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சற்று முன்