- Advertisement -
Homeவிளையாட்டு16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சிஎஸ்கே வீரரின் சிறப்பான சாதனை. 2008 ஆம் ஆண்டு செய்த தரமான...

16 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சிஎஸ்கே வீரரின் சிறப்பான சாதனை. 2008 ஆம் ஆண்டு செய்த தரமான சம்பவம் இன்றுவரை சரித்திரமாக உள்ளது

- Advertisement-

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றே கூறலாம். இந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டி முடிந்து வீரர்கள் அனைவரும் அடுத்து நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கிளம்பி விட்டாலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஐபிஎல் கொண்டாட்டம் முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் சமூகவலைதளங்களில் ஐபிஎல் பற்றிய மீம்களும் பதிவுகளும் பரவியபடிதான் உள்ளன.

இந்த ஐபிஎல் சீசனில் பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல சிக்ஸர் மழைகளாக பொழிந்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினர். இந்த சீசனில் மட்டும் 1124 சிக்ஸர்கள் மொத்தமாக அடிக்கப்பட்டன.  அதிகபட்சமாக ஆர்சிபி அணி கேப்டன் பாஃப் டு பிளஸ்சி 36 சிக்ஸர்களை விளாசினார்.

அதுபோல இந்த சீசனில் அதிக தூரம் சிக்ஸர் விளாசிய வீரர் என்ற பெருமையையும் டு பிளஸ்சியே தக்க வைத்துள்ளார். லக்னோ அணி பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் ஓவரில் அவர் விளாசிய சிக்ஸர் 115 மீட்டர் சென்றது. அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் மும்பையின் டிம் டேவிட் 114 மீட்டரும், ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர் 112 மீட்டரும் விளாசி இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் உள்ளனர்.

- Advertisement-

இந்நிலையில் ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனிலும் சேர்த்து பார்க்கையில் ஆல்பி மார்க்கெல் அடித்த 125 மீட்டர் சிக்ஸ் என்ற சாதனையை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. 2008 ஆம் ஆண்டு அவர் அந்த இமாலய சிக்ஸரை விளாசினார். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

ஆல்பி மார்க்கெலுக்கு பிறகு  பஞ்சாபுக்காக ஆடிய பிரவீன் குமார் 124 மீட்டர் சிக்ஸர் விளாசி இரண்டாம் இடத்தில் இருக்க, கில்கிறிஸ்ட் 122 மீட்டர் சிக்ஸர் விளாசி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலின் நான்காம் இடத்தில் ராபின் உத்தப்பா 120 மீட்டர் சிக்ஸர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்