- Advertisement -
Homeவிளையாட்டுதோனி, ரோஹித்.. 2 பேர் கேப்டன்சிலயும் ஒற்றுமையா இருக்குற விஷயம்.. மும்பை, சிஎஸ்கேவில் ஆடிய வீரர்...

தோனி, ரோஹித்.. 2 பேர் கேப்டன்சிலயும் ஒற்றுமையா இருக்குற விஷயம்.. மும்பை, சிஎஸ்கேவில் ஆடிய வீரர் சொன்ன தகவல்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியை தோனி வழிநடத்தி வந்த சமயத்தில் அவரைப் போல இனி ஒரு கேப்டன் உருவாக முடியுமா என பலரும் அந்த சமயத்தில் குறிப்பிட்டு வந்தனர். இதற்கு காரணம் குறுகிய இடைவெளியில் மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்காக தோனி வென்று கொடுத்தது தான். அவரது இடத்தில் பொருத்தமான கேப்டன்கள் கிடைப்பார்களா என்றெல்லாம் பலவிதமான கருத்துக்கள் இருந்து வந்த நிலையில் மெல்ல மெல்ல அதையெல்லாம் உடைத்து வருகிறார் ரோஹித் ஷ்ர்மா.

ஐசிசி கோப்பைகளை வென்ற விஷயத்தில் தோனிக்கு பின்னால் ரோஹித் இருந்தாலும் சில கேப்டன்சி பண்புகள் நிச்சயம் ரோஹித்தை தனியாக தலைசிறந்த கேப்டனாகவே உணர்த்துகிறது. அணியில் உள்ள வீரர்களை நடத்தும் விதம், மிகுந்த நெருக்கடி நேரத்திலும் அமைதியாக போட்டியை கையாள்வது என ரோஹித் ஷ்ர்மாவின் பல குணங்கள் இனி கிரிக்கெட்டில் கேப்டனாக சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் நிச்சயம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் தான்.

- Advertisement -

இதற்கிடையே தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேரில் யார் சிறந்த கேப்டன் என ஒரு பெரிய விவாதமே தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் தோனி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரின் தலைமையில் சென்னை மற்றும் மும்பை அணியில் ஆடியுள்ளவருமான பியூஷ் சாவ்லா இதே கேள்விக்கு பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.

“தோனி மற்றும் ரோஹித் ஷர்மா என இருவரையும் நீங்கள் பார்க்கும் போது அவர்கள் மிகவும் அமைதியான குணம் உள்ளவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் திடீரென பயம் கொள்ள மாட்டார்கள். போட்டியின் சூழலை அறிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் செயல்படுவதை பார்க்கவே அற்புதமாக இருக்கும். ஒரு கேப்டன் மற்றும் தலைவரின் வேலை என்னவென்றால் போட்டியை சரியாக முன்நடத்தி செல்வது.

- Advertisement-

சில நேரம் வேகமாக செல்லும் போட்டியை நீங்கள் மெதுவாக மாற்ற வேண்டும். சில நேரம் அனைத்தும் நினைத்தது போல நடக்கும் போது நீங்கள் இன்னும் வேகமாக போட்டியை முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் ஆடும் விதத்தி்லேயே ஏன் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான அணிகளாக விளங்குகிறது என்பதும் புரியும்.

நிஜத்தில் ரோஹித் மற்றும் தோனியின் கேப்டன்சியை நாம் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது. அவர்கள் இருவரும் ஒரே குணம் கொண்ட கேப்டன்களாக விளங்கினாலும் ஒரு சில வித்தியாசங்கள் அவர்களுக்கு இடையே மாறுபட்டு தான் உள்ளது. இதனால், சிறந்த கேப்டன்களில் ஒருவரை மட்டும் நாம் தேர்வு செய்ய முடியாது. ஏனென்றால் தோனியை விட ரோஹித் சிறந்த கேப்டன் என்றோ, அல்லது ரோஹித்தை விட தோனி சிறந்த கேப்டன் என்றோ கூறினால் நிச்சயம் அது நியாயம் இல்லாதது” என பியூஷ் சாவ்லா கூறி உள்ளார்.

சற்று முன்