இங்கிலாந்தில் தற்போது டி20 ப்ளாஸ்ட் என்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் வீரர் ஒருவர் பிடித்த மகத்தான ஒரு கேட்ச் தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒரு கேட்ச்சாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த இந்த தொடரின் போட்டியில் சசக்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் ஆகிய இரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஹேம்ஸ்ஷைர் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய சசக்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஹாரிசன் வார்ட் மற்றும் டாம் கிளார்க் ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்க வில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக ஓலி கார்டர் என்ற வீரர் மட்டும் 33 பந்துகளில் 64 ரன்களை அடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது சசக்ஸ் அணி. அதனை தொடர்ந்து ஹேம்ப்ஷைர் அணி பேட்டிங் செய்ய துவங்கியது. அந்த அணியில் தொடக்க ஜோடியான பென் மெக்டர்மோட் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் சொற்ப ரங்களில் வெளியேறினார். அதோடு அடுத்து வந்த டொபி ஆல்பெர்ட்சும் வெறும் பூஜ்யம் ரன்களோடு வெளியிறினார்.
இருப்பினும், அந்த அணியின் பேட்ஸ்மேன் லியாம் டாசன் சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த பென்னி ஹவலின் ஆட்டம் எதிரணிக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அவரது சிறப்பான ஆட்டம் ஒரு சிரிப்பான் கேட்ச் மூலம் முடிவுக்கு வந்தது.
14வது ஓவரின் 5வது பந்தில் அவர் ஃபுல் ஷாட்டை அடிக்க முயற்சிக்கையில் அந்த பந்து வேகமாக எல்லை கோட்டை நோக்கி சென்றது. அப்போது பிராட்லி கர்ரி என்ற வீரர் அந்த பந்தை பார்த்தவாறே வேகமாக ஓடி வந்து மிக சிறப்பாக ஒரு டைவ் அடித்து பறந்து கொண்டே அந்த கேட்சை பிடித்தார். இதை கண்ட அனைவருமே பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
இந்த கேட்ச் குறித்து பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் அந்த கேட்ச் குறித்து ஒரு டீவீட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கேட்ச். அந்த கேட்சை பிடிக்கும் போது அவர் டைவ் செய்த தூரம் என்பது சொல்ல வார்த்தைகள் இல்லை” என்ற வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.