லக்னோ அணி செய்த பிழையால், சிஎஸ்கே-விற்கு அடித்த ஜாக்பாட். நேரடியா பைனலுக்குள் நுழையும் வாய்ப்பை பெற்ற சிஎஸ்கே

- Advertisement -

டிராபிக் ஜாம் போல் இருந்த ஐபிஎல் டேபிளில் தற்போது தான் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது நேற்றைய இரு போட்டிகள் தான். சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில் சிஎஸ்கே-வின் பிளே ஆப் வாய்ப்பு உறுதியானது. தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பாக விளையாடினர்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 223 ரன்களை அடித்து டெல்லி அணிக்கு ஒரு மெகா இலக்கை நிர்ணயித்தது. இந்த மிகப்பெரிய இலக்கை டெல்லி அணி துரத்த தவறியது. அந்த அணியில் வார்னர் மட்டுமே சிறப்பாக விளையாடினார். டெல்லி அணி மொத்தமாக 146 ரன்களை மட்டுமே எடுத்தது .இதன் மூலம் சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது +0.652 என்ற நிலையில் சிஎஸ்கே அணி தற்போது உள்ளது. அதோடு 17 புள்ளிகள் பெற்று பாய்ண்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தையும் சிஎஸ்கே அணி பிடித்துள்ளது.

இந்தப் போட்டிக்கு அடுத்ததாக லக்னோ மற்றும் கே.கே.ஆர் அணிகள் மோதின. அந்த போட்டியில் லக்னோ அணி 176 ரன்களை அடித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய கேகேஆர் அணி 175 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அந்த போட்டியை வென்றது. இதில் கே.கே.ஆர் அணியில் ரிங்கு சிங்க் சிறப்பாக விளையாடிய 33 பந்துகளில் 67 ரன்களை அந்த அணிக்காக சேர்த்தார். இருப்பினும் கே.கே.ஆர் அணி தோல்வியுற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ அணி பாயிண்ட்ஸ் டேபிள் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேசமயம் சென்னையின் இரண்டாவது இடமும் இதன் மூலமே உறுதியானது. இதனால் அடுத்து சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளது உறுதியாகி உள்ளது. இதில் எந்த அணி ஜெயிக்கிறதோ அந்த அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே இதில் ஜெயித்தால் அந்த அணி நேரடியாக பைனலிற்க்கு செல்லும். அதேபோல் நான்காவது இடம் யாருக்கு என்ற தகவல் இன்னும் உறுதியாக வில்லை.

இதையும் படிக்கலாமே: டெல்லிக்கு எதிரான போட்டியின் போது சூப்பரான சாதனையை படைத்த சி.எஸ்.கே. இதுவும் நல்லா தான் இருக்கு.

இந்த நான்காவது இடத்திற்காக மும்பை மற்றும் ஆர்.சி.பி ஆகிய இரு அணிகளும் போட்டி போடுகின்றன. இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தலா 16 புள்ளிகளோடு இருக்கும். ஆனால் ரன் ரேட் அடிப்படையில் பார்த்தால் ஆர்.சி.பி மும்பையை விட கூடுதலான புள்ளிகளை பெற்றுள்ளது. அதனால் தற்போதைய நிலவரப்படி வார்த்தால் ஆர்.சி.பி அணிக்கு நான்காவது இடம் கிடைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இன்றைய போட்டிகளை பார்த்தால் தான் நான்காவது இடம் யாருக்கு என்பது தெளிவாக தெரியும்

- Advertisement -

சற்று முன்