இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கி தற்போது மே மாதம் இரண்டாம் வாரத்தை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் நான்கு இடங்களுக்கான போட்டி பலத்த எதிர்பார்ப்புடன் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி குஜராத் அணி 13 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
அதற்கு அடுத்து சென்னை அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான வாய்ப்புகள் அனைத்து அணிகளுக்குமே உள்ளன. எனவே முதல் நான்கு இடங்களுக்குள் வரும் அணிகள் குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில்
1) குஜராத் டைட்டன்ஸ் : நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போதைய நிலவரப்படி குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக தற்போதே நுழைந்துள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டியே மீதம் உள்ளதால் அவர்கள் முதலிடத்தில் நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
2) சி.எஸ்.கே : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் இன்னும் அந்த அணியின் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை உயர்ப்புடன் வைத்துள்ளது. அதேபோன்று கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால் எளிதில் தகுதி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
ஒருவேளை அந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் மீதமுள்ள அணிகளில் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் சென்னை அணி நல்ல ரன் ரேட் வைத்துள்ளதால் எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும்.
3) மும்பை இந்தியன்ஸ் : இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட மும்பை அணி முதல் நான்கு இடங்களுக்குள் வர வாய்ப்புள்ளது.
4) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : லக்னோ அணியும் இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எளிதில் அவர்களால் நான்காவது இடத்தை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தவிர்த்து ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில் நல்ல ரன்ரேட்டுடன் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவர்களும் பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.