ஆசிய கோப்பைக்காண முதல் போட்டி இன்று பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கியது. இம்முறை ஆசிய போட்டியானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு இடங்களில் நடக்க உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியா என்றே கூறவேண்டும் இதில் அதிகப்படியான போட்டிகள் இலங்கையில் தான் நடக்க உள்ளது.
இந்தநிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதற்கு ஆடுகளம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அந்த ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாகவும் இரண்டாவது பௌலிங் செய்பவர்களுக்கு சாதகமாகவும் இருப்பதாக அறியப்படுகிறது.
முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி சற்று திணறியது என்றே கூற வேண்டும். அந்த அணியின் துவக்க வீரரான பகர் சமான் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து இமாம்-உல்-ஹக்கும் வெறும் ஐந்து ரன்களில் வெளியேறினார். இதன் காரணமாக அந்த அணி இக்கட்டான ஒரு சூழலை சந்தித்தது.
இந்த நிலையில் அணியின் கேப்டனான பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். இதில் முகமது ரிஸ்வான் 44 ரன்கள் இருக்கும்போது திபேந்திரா சிங் அவரை ரன் அவுட் செய்தார். இதனால் பாபர் அசாம் சற்று துவண்டு போனார் என்றே கூற வேண்டும். அதே சமயம் அவர் தனது எரிச்சலையும் களத்திலேயே வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து களத்திற்கு வந்த சல்மான் அலி 14 பந்துகளில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த இப்திகார் அகமத் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .அவர் 71 பந்துகளில் 180 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 342 ரன்களை குவித்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்யத் தொடங்கிய நேபால் அணியின் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். துவக்க ஆட்டக்காரர்களான குஷால் மற்றும் ஆஷிப் ஷேக் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். குஷால் எட்டு ரன்களும் ஆசிப் ஷேக் ஐந்து ரன்களும். எடுத்தனர் அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ரோஹித் பவுடேல் பூஜ்ஜியம் ரன்களை மட்டுமே எடுத்து LBW மூலம் வெளியேறினார். நேபாள அணியை பொறுத்தவரை ஆரிப் ஷேக் 26 ரன்களும், சோம்பால் காமி 28 ரன்களும் எடுத்தனர். இதுவே அந்த அணி வீரர்கள் எடுத்த அதிகப்படியான ரன்கள் ஆகும்.
இப்படி விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சரிந்ததால் 23.4 ஓவர்களிலேயே 10 விக்கெட் இழந்து வெறும் 104 ரன்களை மட்டுமே அந்த அணி குவித்தது. அதனால் பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே இமாலய வெற்றி பெற்றது. இதில் பாக்கிஸ்தான் அணிக்கு வெற்றி ஒருபுறம் என்றால் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் இதில் சாதனை படைத்துளளார்.
அவர் இன்று தனது 102 இன்னிங்ஸ்களில் 19வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்த அணி வீரர் விராட் கோலி தனது 19வது சதத்தை 124 இன்னிங்ஸ்கலில் எடுத்தார். அதே போல தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரானா ஹாஷிம் அம்லா தனது 104 இன்னிங்ஸ்களில் 19வது சதத்தை எடுத்திருந்தார். இவர்கள் இருவரையும் பின்னுக்கு தள்ளி தற்போது பாபர் ஆசாம் 102 இன்னிங்ஸ்களிலேயே 19 சதங்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.