Homeகிரிக்கெட்PAK vs NZ : 346 என்ற மெகா இலக்கு... அசராமல் அடித்து 43.4 ஓவரிலேயே...

PAK vs NZ : 346 என்ற மெகா இலக்கு… அசராமல் அடித்து 43.4 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து காட்டிய நியூஸிலாந்து.. நடந்தது என்ன?

-Advertisement-

உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்குபெறும் அனைத்து அணிகளும் இந்தியா வந்தடைந்து பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் பிரமாதமாக விளையாடி அணியின் ஸ்கோரை கிடு கிடுவென உயர்த்தினர். துவக்க வீரரான அப்துல் அப்துல்லா ஷபீக் 14 ரண்களும், இமாம்-உல்-ஹக் ஒரு ரன்னும் மட்டுமே எடுத்து வெளியேறினர்.

-Advertisement-

அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் கூட்டு சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த துவங்கினர். பாபர் அசாம் 84 பந்துகளில் 80 ரன்கள் விலாசினார். அதேபோன்று முகமது ரிஸ்வான் 94 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக களத்திற்கு வந்த சவுத் ஷகீல் அதிரடியான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார். அவர் 53 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து பௌண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடக்கம். இப்படியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் எடுத்தது.

-Advertisement-

இந்த மெகா இலக்கை துரத்த களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே பெரும் சருக்களாக அமைந்தது. காரணம் அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான டெவோன் கான்வே தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினார். ஆனாலும் மற்றொரு துவக்க வீரரான ரச்சின் ரவீந்திரன் மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்தார்.

அவர் கேன் வில்லியம்சனோடு கூட்டணி சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாட வந்த கேன் வில்லியம்சன் 54 ரன்கள் குவித்தார். மறுபுறம் ரச்சின் ரவீந்திரன் 72 பந்துகளில் 97 ரன்களை விலாசினார். அதேபோல் அடுத்து வந்த வீரர்களான டேரில் மிட்செல் 59 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். ,

அடுத்து வந்த மார்க் சாப்மேன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் மேலும் ஒரு சிறப்பான பார்ட்னெர்ஷிப்பை உருவாக்கினார். இதில் மார்க் சாப்மேன் 65 ரன்களும்,ஜேம்ஸ் நீஷம் 33 ரன்களும் எடுத்து தொய்வில்லாமல் அணிக்காக அதிவேகத்தில் ரண்களை சேஸ் செய்தனர்.

இதன் காரணமாக நியூசிலாந்தின் 43.4 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து முதல் பயிற்சி போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் போலர்களான உசாமா மிர் மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றபடி ஹசன் அலி, ஆகா சல்மான், முகமது வாசிம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்

-Advertisement-

சற்று முன்