2023 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி நேற்றைய போட்டியில் இலங்கை அணியை வென்று நேரடியாக பைனலிற்க்கு அடி எடுத்து வைத்துள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றை எடுத்துக்கொண்டால் இந்திய அணி இதுவரை 7 முறை கோப்பையை வென்று காட்டி உள்ளது. இந்த முறையும் நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் ஆசிய கோப்பை கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. அதே சமயம் இறுதி போட்டியில் இந்திய அணியோடு மோதப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இலங்கை அல்லது பாகிஸ்தான், இந்த இரு அணிகளில் ஒன்று தான் இந்திய அணியோடு மோதும். இரு அணிகளுமே பலமான அணிகள் தான் என்று கூற வேண்டும். ஆனால் ஆசிய கோப்பை ஆரமித்ததில் இருந்து இலங்கையில் தொடர்தியாக மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக பல்வேறு போட்டிகள் தடை பட்டு மீண்டும் துவங்குகிறது. இந்த நிலையில் நாளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கப்போகும் முக்கியமான போட்டியில் ஒரு வேலை மழை பெய்து ட்ரா ஆனால் யார் இந்தியாவோடு மோதுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
குரூப் 4 சுற்றை பொறுத்தவரை இந்திய அணி, தான் ஆடிய இரண்டு ஆண்டங்களிலுமே மகத்தான வெற்றியை பெற்று நல்ல ஒரு ரன் ரேட்டுடன் நான்கு புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது. அதே போல இலங்கை அணி, தான் ஆடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பாக்கிஸ்தான் அணியும் இலங்கை அணியை போலவே இரண்டில் ஒரு ஆட்டத்தை வென்றிருந்தாலும் இந்தியாவிடம் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக ரன் ரோட்டில் இலங்கையை காட்டிலும் பின்தங்கி உள்ளது.
ஒருவேளை நாளை மழை வந்து போட்டி டிரா ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானை காட்டிலும் ரன் ரேட் அடிப்படையில் முன்னுக்கு உள்ளதால் இலங்கை அணியே பைனலில் விளையாடும் தகுதியை பெரும். ஆனால் நாளை போட்டி முழுவதுமாக நடந்து, அதில் யார் வெல்கிறார்களோ அவர்களே பைனலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.