ஆரம்பம் நல்லா தான் இருந்தது… ஆனால் இங்க தான் நாங்க சொதப்பினோம். தோல்விக்கு காரணம் இது தான்.. வருந்தி பேசிய பாபர் அசாம்

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக முக்கியமான போட்டி நடந்தது. இந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் பைனலுக்கு செல்வார்கள் என்ற நிலையில் இந்த போட்டி ஆரம்பமானது. மழை காரணமாக DLS முறையில் 42 ஓவர்களாக இந்த போட்டி குறிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் துவக்கு வீரரான அப்துல்லா ஷபீக் நன்றாக விளையாடினாலும் அடுத்தடுத்து வந்த சில வீரர்கள் சொதப்பினர்.

இருப்பினும் ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தி 42 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தனர். அடுத்து பேட்டிங் ஆட வந்த இலங்கை அணி, 42 ஓவர்களில் 252 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் பாத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வெளியேற, குசல் பெரேரா 17 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்களான குசல் மெண்டிஸ், சமரவிக்ரம, சரித் அசலங்கா உள்ளிட்டோர் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பாக ஆடினர். அதன் காரணமாக எட்டு விக்கெட் இழப்பிற்கு 42 ஓர் முடிவில் இலங்கை அணி 252 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது

இறுதி ஓவர்களில் பெஸ்ட் பவுலர்களை கொண்டு பந்து வீச எண்ணினோம். அதன் காரணமாக கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை ஷாகின் அப்ரிடியை கொண்டு வீசினோம். ஜமான் கான் மீதிருந்த நம்பிக்கையால் அவரை கடைசி ஓவர் வீச சொன்னோம்.

- Advertisement -

இலங்கை அணி எங்களை விட சிறப்பாக ஆடியது என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் அவர்கள் எங்களை வீழ்த்தினார்கள். அதேபோல் பவுலிங் மற்றும் பீல்டிங்கை நாங்கள் சரியாக செய்யவில்லை. அதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம்.

நாங்கள் சிறப்பாக துவங்கினோம், சிறப்பாக முடித்தோம் ஆனால் மிடில் ஓவர்களில் பௌலிங்கில் நாங்கள் சொதப்பினோம். மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட் எடுத்திருந்தால் அது எதிரணிக்கு பிரஷரை கொடுத்திருக்கும். ஆனால் அதை நாங்கள் தவற விட்டோம் என்று அவர் கூறியுள்ளார்

- Advertisement -

சற்று முன்