- Advertisement 3-
Homeவிளையாட்டுஉ.கோ-யில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... முக்கிய வீரர் அணியில் இருந்து விலக வாய்ப்பு - வெளியான...

உ.கோ-யில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் அணியில் இருந்து விலக வாய்ப்பு – வெளியான முக்கிய செய்தி

- Advertisement-

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ள அணி என்றால் அது பாகிஸ்தான் தான். ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை விடவும் பாகிஸ்தான் அணியில் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அந்த அணியில் உள்ள ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷான் ஆகியோர் எந்த அணியின் பேட்டிங்கை சுக்கு நூறாக உடைக்கக் கூடியவர்கள்.

செப்.2ஆம் தேதி நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் கூட இந்திய அணியின் டாப் ஆர்டரை 64 ரன்களில் வீழ்த்தி பீதியை கொடுத்தார்கள். ஒரு பக்கம் 150 கிமீ வேகத்தில் வீசும் ஹாரிஸ் ராஃப், இன்னொரு பக்கம் இடதுகையில் ஸ்விங் செய்யும் ஷாகின் அப்ரிடி, இன்னொரு பக்கம் லைன் மற்றும் லெந்தில் மிரட்டும் நசீம் ஷா என்று மூவரும் வேறு மாதிரியான பவுலர்களாக இருக்கிறார்கள்.

- Advertisements -

ஆனால் இந்த நட்சத்திர பந்துவீச்சாளர்களின் வேலைப்பளுவை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பாகிஸ்தான் அணி செயல்பட்டு வந்தது. ஆசிய கோப்பை தொடரில் நேபாளம், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் கூட முழு பலத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது. வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதால், அனைவரையும் ஒவ்வொரு போட்டியிலும் களமிறக்க வேண்டியதில்லை.

இந்திய அணி எப்படி பும்ராவை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு செய்ததோ, அதேபோல் ஹாரிஸ் ராஃப் அல்லது நசீம் ஷா ஆகியோரை சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர்களின் வேலை பளுவை குறைக்காததன் விளைவு, அந்த அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement-

அந்த வகையில் ஆசியக் கோப்பை தொடரில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக நசீம் ஷா விலகினார். இவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கவில்லை. இவருக்கு ஏற்பட்ட காயத்தை ஸ்கேன் செய்து பார்க்கையில், நசீம் ஷாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாவதற்கு 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இதனால் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா உலகக்கோப்பை தொடரில் களமிறங்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நசீம் ஷாவின் உயரம் குறைவாக இருந்தாலும், ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான் வீரரையே தனது ஒரு ஸ்பெல்லில் வீழ்த்தக் கூடிய பவுலர். அவர் இலலமல் பாகிஸ்தான் அணி களமிறங்குவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சற்று முன்