பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடிய நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களும், ஜோ ரூட் 60 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் 244 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக சல்மான் 51 ரன்களும் பாபர் அசாம் 38 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசும் போது, எங்கள் ஆட்டம் ஏமாற்றமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருந்தால், கதையே மாறி இருக்கும்.
பவுலிங், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் நாங்கள் தவறு செய்துள்ளோம். இன்றைய ஆட்டத்தில் 20 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக விட்டுக் கொடுத்துள்ளோம். எங்களின் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்த்வில்லை. அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால், நிச்சயம் பாதிக்கப்படுவோம்.
நாங்கள் அனைவரும் ஆலோசனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து எங்கைன் பாசிட்டிவை எடுத்து கொண்டு, எங்கள் தவறுகள் குறித்து விவாதிப்போம். நிச்சயம் கேப்டன்சி மாற்றம் இருக்குமா எனொபது பற்றி தெரியாது. ஆனால் எனது அனுபவத்தின் மூலம் செயலாற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 தோல்வி, 4 வெற்றி என்று மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பதவி பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.