இந்தியாவுக்கு வந்து உலகக்கோப்பை தொடர்ல விளையாட நாங்க தயார். ஆனா ஒரு கண்டீஷன். இந்த ஸ்டேடியத்துல போட்டிகள நடத்தக் கூடாது – பாக். கிரிக்கெட் வாரியம் வைத்த ட்விஸ்ட்

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்படும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் முதலாக அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இணைந்து நடத்தின.

நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு மற்றும் தர்மஷாலா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடக்கும் என தெரிகிறது. இன்னும் முழுமையான அட்டவணை உறுதி செய்யப்படவில்லை. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணி ஆசியக் கோப்பை விளையாட பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ள நிலையில் பாகிஸ்தானும் உலகக்கோப்பை தொடருக்கு வர மறுக்கும் என பேச்சுகள் எழுந்தன. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. பாகிஸ்தான் அணி சொல்லும் ஹைபிரிட் மாடலில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை. பிசிசிஐ, இலங்கையில் ஆசியக் கோப்பையை நடத்த சொல்லி கேட்கிறது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் உடன்படவில்லை.

பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால் ஆசியக் கோப்பைக்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படா விட்டால் பாகிஸ்தான் இந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போகும் வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நிஜாம் சேத்தி இந்தியா வந்து உலகக்கோப்பை விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாக் அவுட் அல்லது பைனல் போட்டிகள் தவிர அகமதாபாத்தில் விளையாட சேத்தி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: WTC பைனல் மூலம் தோனியின் சாதனையை முறியடித்த கோலி மற்றும் ரோகித். ஆனாலும் யுவராஜ் தான் அந்த வரிசையில் முதலில் உள்ளார்.

பாகிஸ்தானின் போட்டிகள் கொலகத்தா, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடத்த நிஜாம் சேத்தி வேண்டுகோள் விடுத்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. அகமதாபாத்தில் இந்தியாவுடன் விளையாடினால், வீரர்களின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை படுவதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்